உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்துறை அளவியல் 645

(4) பிறகு அவற்றை எளிய தெளிவான மொழியில் அமைத்தல் வேண்டும். கூடியவரை கடின சொற்களை விலக்கவேண்டும். கையாளும் நடையிலோ மொழியிலோ எவ்வித ஐயமும் இருத்தல் ஆகாது. பாடப் புத்தகங்களிலுள்ள வாக்கியங்களேயோ சொற்ருெடர்களையோ சிறிதும் பயன்படுத்தல் கூடாது.

(5) சோதனைகளின் நீளமும் வரையறை செய்யப் பெறுதல் வேண்டும். சோதனைகளின் நம்பகம் அவற்றின் நீளத்தைப் பொறுத்தது. சோதனைகளின் நீளம் அவற்றின் நோக்கத்தைப் பொறுத்தது. பொருளறிவைப் பரந்த நிலயில் தேறவேண்டுமானுல் சோதனைகள் சற்று நீளமாகவே அமைதல் வேண்டும் ; ஒவ்வொரு பகுதியிலும் முக்கியமான விவரங்களைத் தேறுவதாக இருத்தல் வேண்டும். சோதனைகளின் நோக்கம் குறைகளே அறிவதாக இருந்தால், அவை சுருங்கிய வடிவிலமைந்தால் போதுமான்து. அதுபோலவே, சில நாட்கள் கற்ற பாட அறிவை அளக்கும் பொழுதும் குறுகிய சோதனையைக் கையாண்டால் போதுமானது.

(6) சோதனைகளின் விளுக்களே நல்லதோர் ஒழுங்கில் அமைத்தல் மிகவும் இன்றியமையாதது. தொடக்கத்தில் எளிய விளுக்களும் படிப்படியாகக் கடின விளுக்களும் அமைதல் வேண்டும். இவ்வாறு அமைப்பது எளிதான செயல் அன்று. ஒரு சோதனையைப் பல தடவைகளில் கையாளும்பொழுது மாணுக்கர்கள் விடையிறுப்பதை உற்று நோக்கி இந்தக் கூறினே அறுதியிட வேண்டும். அன்றியும், விளுக்களை அமைக்கும் ஒழுங்குமுறை விடைகளைக் குதிங்பாகப் புலப்படுத்துவதாக இருத்தல் கூடாது ; ஒரு வின பிறிதொரு வினவின் விடையை அறிவித்தல் கூடாது. புயனற்ற விவரங்களைச் சோதனைகளில் அமைத்தலும் ஆகாது.

(7) அறிதிறனுல் விடையிறுக்கக்கூடிய விளுக்களே அடைவுச் சோதனைகளில் அமைத்தல் ஆகாது. அன்றியும், வெளிப்படையாகத் தெரியும் விடைகளைக்கொண்ட விவ