பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்துறை அளவியல் ê 49

குழுவிற்குப் பயன்படும்பொழுதும் காணல் இயலாது. எனவே, ஒரு சோதனை ஒரு குறிப்பிட்ட நிலையில் பயன்படும் பொழுதும் ஒரு குறிப்பிட்ட அறிதிறனுள்ள மாளுக்களிடம் பயன்படும்பொழுதும்தான் ஒரு திட்டமான ஏற்புடைமையைப் பெற்றிருக்கும் என்று சொல்லவேண்டும்.

சோதனை ஆராய்ச்சியில் ஈடுபட்டு உழைத்த அறிஞர்கள் கல்வித் திட்டம்பற்றிய ஏற்புடைமை, புள்ளி விவர ஏற்புடைமை, உளவியல்பற்றியும் காரண காரிய முறை பற்றியுமுள்ள ஏற்புடைமை ஆகிய மூவித ஏற்புடைமைகளைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் கல்வித் திட்டம் பற்றிய ஏற்புடைமையே மிகவும் முக்கியமான தென்றும் அவர்கள் கூறுகின்றனர். அவைபற்றிய முழு விவரங்களே அந் நூலில் கண்டுகொள்க.

2. Isibusib (Reliability) : EPG Esso சோதனையின் அடுத்த சிறப்பியல்பு நம்பகம்’ எனப்படுவது. எதை அளந்தறிய வேண்டுமோ அதை மிகவும் திறமையாக அளந்தறிவதை நம்பகம் என்று வழங்குவர். ஒரு குறிப்பிட்ட சோதனையை ஒரே கூட்டத்தினரிடையில் இடையிட்டு இடையிட்டுப் பன்முறைப் பயன்படுத்தினுலும் ஒரேவிதமான முடிவுகளைத்தான் காணல்கூடும். இந்தச் சோதனையை முழுதும் பயன்படுத்தினுலும், பாதியைப் பயன்படுத்தினுலும், சோதனையில் வரும் ஒற்றைப்படை எண்ணுள்ள வினுக்களை ஒரு முறையும் இரட்டைப்படை எண்ணுள்ள விளுக்களைப் பிறிதொரு முறையுமாகப் பயன்படுத்தினுலும், நம்பகமுள்ள முடிவுகளைத் தான் காண முடியும். இத்தகைய சோதனையில்தான் நம்பகம் என்ற கூறு அம்ைந்துள்ளது என்று கொள்ளவேண்டும். ஒருமுறை வகுப்பில் இலெ கணத்தேர்வு ஒன்று நடத்திய ஆசிரியர் வகுப்பில் மூவரே தேறியது கண்டு, மூன்று நான்கு நாட்கள் கழித்து நடத்திய தேர்வில் வேருெரு மூவர் தேரக் காண்கின்ற காட்சியை எந்தப் பள்ளியிலும் இன்று காணலாம். கணக்குத்

  • Greene and Jorgensen: Measuremeut and Evaluation in the Elementary schools Liš, 54—61.