பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/675

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

650 தமிழ் பயிற்றும் முறை

தேர்வில் இது அடிக்கடி நேரிடும் நிகழ்ச்சியாகும். இந்தச் சோதனைகள் முன்னுக்குப் பின் முரணு ைமுடிவுகளைத் தருகின்றன. நேற்று அறிவாளி, இன்று முட்டாள் என்பது வியத்தகு முடிவன்ருே ? ஒரு நல்ல தேர்வில் இம்முரண். படாப் பண்பை அதாவது நம்பகமற்ற கூறினேக் காண முடியாது.

3. இயலுமை (Adequacy) : கல்வியால் பெறக்கூடிய வினேயாண்மை, திறமை, மனப்பான்மை முதலிய எல்லாப்பண்புகளையும் இன்று நடைமுறையிலுள்ள சோதனைகளில் அளந்தறிதல் முடியாது. அன்றியும், அவை யாவற்றையும் அளந்தறிவதில் எடுக்கும் காலமும் முயற்சியும் வீணே. என்ருலும், பிறதுறைகளில் கையாளப்பெறும் சில முறைகளைப் பின்பற்றிச் சோதனையை ஆயத்தம் செய்தால் அது நற்பயனே விளைவித்தல் கூடும். ஒரு கூல வாணிகன் ஒரு வண்டி நெல்லை வாங்கும்பொழுது என்ன செய்கின் ருன்? அந்த வண்டியிலுள்ள எல்லா மூட்டைகளிலும் சிறிதளவு எடுத்து அவற்றைத் தரப்படி, வைத்துப் பார்க்கின்ருனன்ருே ? அதுபோலவே, சோதனை ஆயத்தம் செய்வோரும் மாணுக்கர்களின் கல்வியறிவு நிலையை அளந்து அறிவதற்கு அவர்கள் பயிலும் பரந்த பொருள் எல்லையில் பல்வேறு பொருள்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் வினுக்களை ஆக்கவேண்டும். இந்த வினுக்களைக்கொண்டுள்ள சோதனையால் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு தான் மாணுக்கர்களின் கல்வியறிவினை அறுதியிடல் வேண்டும். மாணுக்கர்கள் பயின்ற பொருளின் எல்லேப் பரப்பில் எவ்வளவுதூரம் விரிவாகப் பொருள்களைத் தேர்ந்தெடுத்து வினுக்கள் ஆக்கப்பெறுகின்றனவோ அந்த எல்லேயைத் தான் இயலுமை’ என்று குறிப்பிடுகின்றனர். தேறப்பெறும் பொருட்பரப்பின் விரிவிற் கேற்றவாறு இயலுமையும் அதிகப்படும். தேறப்படும் பொருட் பரப்பு விரிந்திருந்தால் மாணுக்கர்கள் பெறும் மதிப்பெண்களும் சரியானவையாக இருக்கும். தேறப்படும் பகுதி சிறிதாக இருந்தால் சில மாளுக்கர்கட்கு அது நியாயமற்றதாக இருக்கும் ; அப்பகுதி மிகவும் விரிந்திருந்தால், எல்லா மாளுக்கர்ட்கும் அது