பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/678

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்துறை அளவியல் 653。

நிலையுடனும், வகுப்புடனும், அதே பாடத்திட்டத்தைப் பயில்வோருடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு சோதனேயின் இரட்டைப் படியைக்கொண்டு கற்பித்தலுக்கு முன்னும் பின்னும் உள்ள நிலைகளை அச் சோதனையை இருமுறை: கையாளாமலேயே ஒப்பிட்டுப் பார்க்கவும் இயலும்.

தரமாக்கிய சோதனைகளுக்கு மட்டிலும் பொதுநிலை அளவைகளும் இரட்டைப்படிகளும் கிடைத்த போதிலும், srsfiu : Lisirsifisâsug ipsopesăbii 3. (Statistical procedures) கைவாண்டு சாதாரணப் புறவயச் சோதனைகளின் முடிவுகளேயும் ஒப்பிடலாம். -

8. சிக்கனம் (Economy) : சிக்கனம் நல்ல சோதனே. யின் முக்கிய பண்பு என்று கொள்வதற்கில்லை. ஆளுல், அப் பண்பை ஒதுக்கி விடுவதற்குமில்லை. மனம் போனவாறு மலிவான சோதனைகளையும் முறைகளையும் கையாண்டு ஆய்தலில் உண்மையான சிக்கனத்தை அடைய முடியாது ; ஆல்ை, விலையுயர்வுள்ள அளவு கருவிகளும் முறைகளும் நல்லவை என்றும் கூறுவதற்கில்லை. ஒருகால் நீண்ட கால எல்லையில் சோதனையின் செலவைச் சோதனைகளின் ஏற்பு. டைமையையொட்டி இவ்வளவு என்று கணக்கிடுதல் கூடும். அளவு முறையின் திறன் குறையாமலேயே சோதனையின் செலவினங்களைக் குறைப்பதற்குப் பல உபாயங்கள் உள்ளன. சாதாரணமாகச் சில சோதனைகளைப் படியெடுக் கும் பொறியைக்கொண்டு ஆயத் தம் செய்யலாம் ; சிலவற்றைக் கரும்பலகையில் எழுதியோ, அல்லது வாய்மொழி யாகவோ கொடுக்கலாம். பல பள்ளிகள் ஒன்று கூடி சோதனைகளே ஆயத்தம் செய்து செலவினங்களைக் குறைக்

受S惑a)歴「誌』。

9. பயன் (Utility) : மேற்கூறப்பெற்ற எல்லா நற்பண்புகளைக் கொண்டிருந்தாலும் சோதனை ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்திற்குச் சிறிதும் பயன்படாது போதலும் கூடும். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் திருப்திகரமான முறையில் ஒரு திட்டமான தேவையை நிறைவு செய்தால்தான் அது நல்ல முறையில் பயன் அளிக்கின்றது என்று கொள்ளலாம்.