பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 தமிழ் பயிற்றும் முறை

இம் முறையில் தேர்ந்தெடுக்கப்பெருத அல்லது ஆயத்தம் செய்யப்பெருத சோதனைகளினுல் பயன் விள யாது போவதுடன் தீங்குகளும் நேரிடக்கூடும். யாதொரு நோக்கமு. மின்றி சோதனைகளைப் பயன்படுத்துதல் கூடாது. புதிய முறைகளில் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் ஒரு திட்டமான நோக்கத்துடன்தான் மாளுக்கர்களேச் சோதனை செய்வர் ; சோதனையின் முடிவுகள் மாணுக்கர்களின் நலனுக்குப் பயன் படுத்தப்பெறும்.

தரமாக்கிய சோதனையாக இருந்தால், முடிவுகளைப் பயன்படுத்தும் முறைகள் குறிப்பேடுகளில் தெளிவாக மேற்கோளுடன் விளக்கப்பட்டிருத்தல் வேண்டும் ; முடிவு. களைக்கொண்டு எதிர்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்று திட்டமாக வரையறை செய்யப்பட்டிருத்தல் வேண்டும். வகுப்புப் பதிவேடுகளும் மதிப்பெண் பட்டிகளும் சோதனைகளைப் பயனுடையனவாய்ச் செய்கின்றன. ஆசிரியரே ஆயத்தம் செய்யும் சோதனைகளாக இருந்தால் அவற்றின் பயன் சோதனைகளை வரையறை செய்வதில் ஆசிரியரின் முன்யோசனையைப் பொறுத்துள்ளது ; சேrத. னேகளின் முடிவுகள் வகுப்புக்களின் தேவைகளை நிறைவு செய்யும் நிலையிலிருக்கும். எனவே, சோதனையின் பயன். யும் அதன் சிறந்த பண்பாகக் கருதுதல்வேண்டும். ஏனேய பண்புகளைப்போல் இது தெளிவாக இராவிடினும், அதை சோதனையின் பயனே வரையறை செய்யும் அழுத்தமான இறுதிக் கூருகக் கொள்ளலாம்.

தமிழ் பயிற்றும் முறை முற்றும்