பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்திட்டமும் மொழிப்பாடத்திட்டமும் 43;

அடிப்படையான விதிகளைக் காணலாம். அவற்றைச் சுருக்கமாக ஈண்டு எடுத்துரைப்போம். முதலாவது : நவீன கல்வி முறைப்படி கல்வி நிலேயங்களில் ஏட்டுப் படிப்பாகப் பயிலப்பெறும் பாடங்கள் மட்டிலும் கல்வித் திட்டம் அன்று ; ஆனல் பள்ளிகளில் வகுப்பறை, நூலகம், அறிவியல் ஆய்வகம், தொழிலகம், விளையாட்டிடம் முதலிய இடங்களில் ஆசிரியர் - மாளுக்கர் தொடர்புகளேயும் சேர்த்தே கல்வித்திட்டம் என்று சொல்லவேண்டும். எனவே, பள்ளி வாழ்க்கையே கல்வித்திட்ட மாகின்றது; பள்ளி வாழ்க்கையே மாளுக்கரின் பிற்கால வாழ்க்கையினைச் சீரிய முறையில் உருவாக்கி அவர்களின் சரியான ஆளு. மையை வளர்க்கின்றது. இரண்டாவது : தனிப்பட்ட மாணுக் கர்களிடம் காணப்படும் சில பண்புகளுக்கேற்றவாறும், அவர்களுடைய தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ற வாறும் கல்வித்திட்டம் பல்வேறு பகுதிகளைக்கொண்டு விருப் பப்படி விரித்துக்கொள்ளக் கூடியதாக இருக்கவேண்டும். மாளுக்கர்களின் இயல்புக்கும் மனவளர்ச்சிக்கும் பொருந்தாத பாடங்களை வலிந்து திணித்தால் அவை அவர்களிடம் ஏமாற்றத்தை உண்டாக்குவதுடன் சாதாரன வளர்ச்சியையும் தடைப்படுத்திவிடும். எல்லா மாணுக்கர்களுக்கும் வேண்டிய அறிவு, திறன், சுவைப்பண்பு ஆகியவற்றை வளர்ப்பதற்கேற்ற சில பகுதிகள் உள்ளன. அவை: கட்டாயம் கல்வித்திட்டத்தில் இடம் பெறல்வேண்டும் ; ஆனல், அவை குறைந்த அளவு இருந்தால் போதுமானது: எக்காரணத்தாலும் மாணுக்கர்களின் ஆற்றலுக்கும் திறனுக் கும் அப்பாற்பட்ட அளவு பாடங்களைச் சேர்த்தல் கூடாது. ஒரே விதமான திறனே எல்லோரிடமும் எதிர்ப்பார்த்தலும் ஆகாது. மூன்ருவது : கல்வித் திட்டத்தில் பாடங்களாகத் தேர்ந்தெடுக்கப்பெறும் பகுதிகள் சமூக வாழ்க்கையுடன் பொருந்துவனவாக இருக்க வேண்டும் , அப்பகுதிகள் வாழ்க்கையில் காணும் நிகழ்ச்சிகளுக்கு விளக்கந் தருவனவாக இருக்கவேண்டும். எனவே, நடைமுறையில் பயன் தரத்தக்க முறையில் பாடங்கள் அமையவேண்டும். பள்ளிக்கென அரசினரால் வகுக்கப்பெறும் கல்வித்திட்டம்