பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சென்னை மாநில முன்னாள் கல்வியமைச்சர் உயர் திரு. தி. சு. அவினுசிலிங்கம் அவர்கள் மனமுவந்து அளித்த அணிந்துரை

ஒரு நாட்டு மக்களின் மேன்மைக்கு அறிகுறியாக இருப்பது அவர்கள் மொழியின் சிறப்பு. பிற மொழிகளின் மூலம் அறிவு பெறலாம். ஆனால் ,மனப் பண்பும் சீரிய சிந்தையும் தம் சொந்த மொழியை ஆழ்ந்து பயிலுவதனால்தான் பெற முடியும். எனவே, நம் நாடு புது வாழ்வு பெற்றுப் பெருவாழ்வை நோக்கிச் செல்லும் இக்காலத்தில் நமது மொழியின் வளர்ச்சியைப்பற்றி அறிஞர்கள் நினைப்பதில் ஆச்சரியம் இல்லை.

மொழியின் வளர்ச்சி என்பது வெறும் வாய்ப்பேச்சால் மட்டிலும் உண்டாவதில்லை. அதற்காக மொழியின்பால் பக்தி தூண்டப்பெற்று மொழியின் சேவையே பயனும் பண்பும் எனக்கருதி உழைப்பவர்களின் முயற்சியினால்தான் அஃது உண்டாகும். எல்லாத் துறைகளிலும் நல்ல தமிழ்ப் புத்தகங்கள் வெளிவரவேண்டும். எந்தத் தமிழனும் தமிழிலேயே படித்து எத்தகைய உயர்ந்த ஞானத்தையும் பெற வேண்டும். தமிழில் வரும் புத்தகங்கள் ஆரம்பத்தில் மொழி பெயர்ப்பாக அமையலாம். ஆனால், மொழி பெயர்ப்பு நூல்கள் முதல்தரமானவையாக இருக்க முடியாது. முதல்தரமான புத்தகங்களாக இருக்க வேண்டுமானல், மக்கள் பிற துறை அறிவைத் தாங்களே பெற்று அவ்வறிவுடன் ஒன்றி அதன் பின்னர் அவ்வறிவு அவர்களின் சொந்த அனுபவ மாய் வெளிவர வேண்டும். இத்தகைய புத்தகங்கள் எல்லா அறிவுத் துறைகளிலும் இப்பொழுது மிகமிகத் தேவை.

இந்நோக்கங்கள் நிறைவேற்றுவதற்காகப் பலவிதமான முயற்சிகள் இப்பொழுது மேற்கொள்ளப்பெற்று வருவது