பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தமிழ் பயிற்றும் முறை

குடும்பம், வீடு, உறவினர்கள், நண்பர்கள், உணவு, உடை, விளையாட்டு, பள்ளிக்கூடம், தோட்டம், பண்டிகைகள், திருவிழாக்கள் முதலியவைகள் பாடப் பொருள்களாக அமையலாம் ; நன்ருகப் பேசும் திறமை கைவரப் பெற்ற பிறகு கதைகள், செவிலி-, ஆட்டப் பாட்டுக்கள், கதைப் பாட்டுக்கள், பிறநாட்டுக் கதைகள் முதலியவற்றைக் கற்பிக்கலாம். இவை கேட்டறிவதில் சேர்க்கப் பெற வேண்டியவை.

குழந்தைகளின் இயக்கப் பகுதியிலும் படிப்படியான திட்டம் இருத்தல் வேண்டும். முதலில் ஒடியாடி விளையாடவும், குதிக்கவும், நடிக்கவும் வாய்ப்புக்கள் தரவேண்டும் ; இதனுல் பெருந் தசைகள் பயிற்சிபெறும். பிறகு படிப்படியாக சிறு தசைகளுக்குப் பயிற்சிகள் தருதல் வேண்டும். சிறு பொருள்களை ஒரிடத்திலிருந்து பிரிதோ ரிடத்திற்குக் கொண்டு செல்லல், சாப்பிடும் தட்டுக்களைக் கழுவுதல் போன்ற அனுபவத்திற்கு உட்பட்ட செயல்களேச் செய்யப் பழகுதல் வேண்டும். பிறகு ஒவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், பொம்மைகள் செய்தல் போன்ற பயிற்சி களைத் தருதல் வேண்டும். கதை சொல்லுதல், நடித்தல், பாடம் ஒப்புவித்தல், பாடுதல் முதலிய வாய்ப்புக்களைத் தந்து வெளியிடும் துடிப்பைத் திருப்தி செய்யலாம். படித்தலும் எழுதுதலும் சற்றுப் பின்னுல் கற்பிக்கப்பெற வேண்டியவை.

சுருங்கக் கூறினல், தொடக்க நிலைப்பள்ளி மாளுக்கர் களுக்குச் செயல் முறைக் கல்வி தான் வேண்டப்படுவது. குழந்தைகள் வாழுமிடத்திற் கேற்றவாறு கல்வித்திட்டம் வகுக்கப் பெறவேண்டும். எனவே, சில பாடப் புத்தகங்களிலிருந்தும் கொள்கைகளிலிருந்தும் இக்கல்வித் திட்டத்தை வகுக்க முடியாது. குழந்தைகளின் கல்வி புகைவண்டி நிலையம்,அஞ்சல் நிலையம்,காய்கறிச் சந்தை,விலங்குக்காட்சி சாலே, தோட்டம், வயல் முதலிய இடங்களில் அவர்கள் நேரடியாகப் பெறும் பட்டறிவில் தொடங்குகின்றது என்று