பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்திட்டமும் மொழிப்பாடத்திட்டமும் 49

தம் கல்வியை முடித்துக் கொள்ளலாம். இந்நிலையில் ஆங்கிலத்தை விருப்பப்பாடமாக எடுத்துத் தேர்ச்சி பெற்ருேருக்கு உயர்நிலைப்பள்ளியில் நான்காம் படிவத்தில் சேர்ந்து தொடர்ந்து கல்விபெற வாய்ப்பு அளிக்கப் பெற் றுள்ளது. ஐந்தாம் வகுப்பை முடித்துக்கொண்ட மானுக் கர்கள் உயர்நிலைப் பள்ளியில் முதற்படிவத்தில் சேர்ந்து தொடர்ந்து கல்வி பெற்று ஆரும்படிவத்தின் இறுதியில் அரசினரால் நடத்தப்பெறும் தேர்வு எழுதித் தம் படிப்பை முடித்துக்கொள்ளலாம். இந்த இரண்டு வழிகளும் தேவை தானு என்பதைச் சார்ஜண்ட் குழுவினர் ஆராய்ந்து தேவைதான் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். தொடக்க நிலைப்பள்ளியில் ஐந்து வகுப்புக்கள் படித்து முடித்த மாணுக் கர்கள் தம்முடைய திறன், விருப்பம், ஆற்றல் முதலிய வற்றிற்கேற்ப உயர் நிலைத் தொடக்கப் பள்ளியிலோ உயர் நிலைப் பள்ளியிலோ சேர்ந்து கல்வியை முற்றுவித்துக் கொள்வர் என்று அக்குழு நம்புகின்றது.*

தொடக்கநிலைப் பள்ளிகளிலிருந்துவரும் மாளுக்கர்களை உயர்நிலைப் பள்ளியில் தேர்ந்து எடுக்கும் முறை மன நிறைவு தருவதாக அமையவில்லை. கட்டணம் செலுத்தத் தகுதி யுள்ளவர்கள் அனைவருமே சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். இங்கிலாந்து நாட்டில் வயது, திறன், விருப்பம் ஆகியவற்றை யொட்டிச் சேர்க்கப்பெறும் முறையை நமது நாட்டில் கையாள வேண்டியதற்கேற்ற அடிப்படைச் செயல்கள் இன்னும் மேற்கொள்ளப் பெறவில்லை. முதல் மூன்று படிவங் களில் மாணுக்கர்கள் பயின்று வருங்கால் அவர்களைக் கூர்ந்து கவனித்து அவர்கள் நான்காம் படிவத்தில் மேற்கொள்ள வேண்டிய துறையை அறுதியிடலாம். இன்றைய சூழ்நிலையில் இப்பொழுதுள்ள ஆசிரியர்களைக் கொண்டு

  • Report on Post-war Educational Development in India (The Sargent Committee Report)
  • இன்று நடைமுறையிலுள்ள ஒருமைப்பாட்டுக் கல்வித் திட்டத்தில் (integrated Course) இந்த இரு வழிகட் கும் இடமில்லாது போய்விட்டது.

த-5