பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தமிழ் பயிற்றும் முறை

இவ்வாறு செய்வது விரும்பத்தக்கதன்று ; அதனல் சரியான பயனும் விளையாது.

நடுநிலைப் பள்ளிக்கேற்ற கல்வித் திட்டம் : இது நடுநிலைப் பள்ளி மாணுக்கர்கள் தொடக்க நிலைப்பள்ளியில் பெற்ற கல்வியை இன்னும் சற்று விரிவாக எய்தும்படி செய்யும். தொடக்கநிலைப்பள்ளியின் கல்வித் திட்டத்தை யொட்டியே இந்நிலைப் பள்ளியின் கல்வித் திட்டமும் அமையவேண்டும். தொடக்கநிலப் பள்ளிகளில் பொது இயல்பாகத் திகழ்ந்த செயல்முறைக் கல்வியே இங்கும் இடம்பெறல்வேண்டும்; கற்பித்தலில் செயல்முறைக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப் பெறுதல் வேண்டும்.

நடுநிலப் பள்ளியில் பயிலும் மாணுக்கர்கள் மிக இளம் பருவத்தினர் ; ஒவ்வொரு பாடத்தையும் தனித்தனியாகக் கற்று அறியும் ஆற்றல் இல்லாதவர். எனவே, பொதுவாக மனித இனம் திரட்டி வைத்துள்ள பல்வேறு அறிவுத் துறைகளைப்பற்றியும் செயல்களைப்பற்றியும் இவர்கள் அறியச் செய்தல்வேண்டும். மொழியும் இலக்கியமும், சமூக இயல், பொது அறிவியல், கணிதம், முருகுணர் கலைகள், உடற்பயிற்சி, கைத்தொழில் ஆகிய துறைகள் இக்கல்வித் திட்டத்தில் பாடங்களாக அமையலாம். இவை களைப் பொதுவாகக் கற்பிக்கவேண்டுமேயன்றி, எந்தப் பாடத்திற்கும் சிறப்புத் தந்து விரிவாகக் கற்பிக்கவேண்டிய இன்றியமையாமை இல்லை; கடந்த பல நூற்ருண்டுகளாக மானிட அறிவு திரட்டிவைத்துள்ள கருவூலத்தையும் அது வளர்த்துள்ள பண்பாட்டையும் மேல்நோக்காக அறியும் முறையில் இருந்தால் போதுமானது. இவ்வாறு அமைந் தால் குழந்தை அறிவுச் செல்வத்தின் பல துறைகளை அறியவும், உயர்நிலைப் பள்ளிக்கு வருங்கால் தனக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்து, அதை நன்கு கற்கவும் வாய்ப்புக்கள் ஏற்படும். ஆகையால் இத்திட்டத்தில் எல்லா முக்கியமான துறைகளும் சேர்க்கப்பெற் றிருத்தல் அவசியமாகின்றது. இப்பருவத்தில்தான் தனிப் பட்டவர்களின் திறன்களும் கவர்ச்சிகளும் ஒன்று சேர்ந்து