பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தமிழ் பயிற்றும் முறை

களே யொட்டி இருப்பதாலும், பள்ளி இறுதித் தேர்வினை யொட்டி இருப்பதாலும் அது விருப்பப்படி மாற்றிக் கொள்ளும் முறையில் இல்லை. புறநிலைத் தேர்வு உள்ள வரையில் கல்வித்திட்டத்தை நம் விருப்பப்படி இயங்க வைக்க இயலாது ; அதுவும் வளைந்து கொடுக்காது.

கல்வித் திட்ட ஆராய்ச்சி : எவ்வளவு கவனத்துடன் கல்வித்திட்டங்கள் வகுக்கப்பெறினும், கல்வி முறையை அவை மாற்றிவிடும் என்று கருத முடியாது. கல்வி முறை வெற்றியடைவது கல்வித்திட்டங்களின் முழு விவரங்களையும் அவற்றைக்கையாளும் முறைகளையும் பொறுத்திருக்கின்றது. அடிக்கடிக் கல்வித்திட்டத்தில் புதிய நோக்கும் போக்கும் ஏற்படவேண்டும். ஒரு காலத்தில் சில நோக்கங்களின் அடிப்படையில் உருவாக்கப் பெற்ற கல்வித்திட்டம் எல்லாக் காலத்திற்கும் நிரந்தரமாக அமையாது. நாட்டின் தேவைக் கேற்றவாறும், சோதனைகளின் முடிவுகளுக்கேற்றவாறும் அஃது அடிக்கடி மாற்றியமைக்கப் பெறல் வேண்டும். மனித அறிவு சதா விரிந்து கொண்டே இருக்கின்றது; எனவே, கல்வித் திட்டத்தினையும் அடிக்கடி சோதித்துப் புதிய விவரங்களைச் சேர்த்தும், பழையனவற்றில் தள்ள வேண்டியவைகளே நீக்கியும் மாளுக்கர்களின் இக்கால பிற் காலத் தேவைக்கேற்றவாறு மாற்றியமைத்துக்கொண்டே யிருக்கவேண்டும். ஆகவே, கல்வித் திட்டம் பற்றிய ஆராய்ச்சி நம் நாட்டில் விரைவில் தொடங்கப்பெறல் வேண்டும். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள்தாம் இத்துறையில் பெருந் தொண்டாற்றவேண்டும். அரசாங்கமும் பல்கலைக் கழகங்களும் ஒருங்கு இயைந்து இத்துறையில் ஆவன செய்ய முன்வரவேண்டும். ஐந்தாண்டுத் திட்டங்களில் இஃது அமைவதற்கேற்ற வழிவகைகள் செய்யப்பெறல் வேண்டும். ஆழ்ந்த, நிறைந்த பட்டறிவும் சிறந்த முன் யோசனையுமின்றி அடிக்கடிப் பாடத் திட்டங்களையும் கல்வி திட்டங்களையும் மாற்றியமைப்பது விரும்பத்தக்கதன்று. நம்நாட்டில் அடிக்கடி இங்ங்னம் மாற்றப்பெறுவது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும். இதல்ை மானுக்கர் உலகம் அடையும் கேடுகள் அளவற்றவை.