பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் அடிப்படை விதிகள் 59。

கண்டும், பல்வேறு ஊக்கிகளைக் (Motives) கற்கும் வாய்ப்புக்களுடன் நுழைத்தும் இதை ஒருவாறு வெற்றியுடன் மேற்கொள்ளலாம்.

2. செயல் மூலம் கற்றல் ஃபிராபெல் என்ற அறிஞர் செயல் மூலம் கற்றலே வலியுறுத்தினர் ; நடை முறையில் இதற்கு முக்கிய இடமும் கொடுத்தார். இதன் வெற்றியைத் தமது கிண்டர்கார்ட்டன் முறையில் மெய்ப்பித்தும் காட்டினர். ஒரு குழந்தையின் உடலும் உள்ளமும் வகுப்பறையில் நன்கு செயற்பட்டால்தான் கற்றல் எளிதாக அமையும் ; கற்றல் விரைவாகவும் செல்லும். மூளையும் கையும் இணைந்து செயற்படும்படி கற்பிக்கும் முறையை அமைத்தல்தான் நிறைந்த பயனை விளைவிக்கும். பொதுவாகக் கீழ் வகுப்புக்களில் மொழிப் பாடங்கள் உற்சாகமின்றிக் கற்பிக்கப்பட்டு வருகின்றன ; கற்கும் மானுக்கர்களும் மொழிப் பாடங்களில் மகிழ்ச்சியுடன் அதிகமாக ஈடுபடுவதில்லை. காரணம், அவற்றுடன் செயல் முறை அமைந்திராததுதான் என்றே சொல்லவேண்டும். இன்றும் வகுப்பறைகளில் உரக்கப்படித்தல், விளக்கம் தருதல், சொல்லுவது எழுதுதல், பார்த்து எழுதுதல் போன்ற முறைகள்தாம் கையாளப்பட்டு வருகின்றன. இவை யாவும் மாணுக்கர்களின் சிந்தையைக் கவர்பவை அல்ல. இயன்றவரை மொழிப் பாடங்களில் கைவேலையையும் இணேத்துக்கொள்ளும் வழிகளைப் பற்றி ஆசிரியர்கள் சிந்தித்து அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவர முயலவேண்டும். எடுத்துக்காட்டாக மாணுக்கர்களை சொல் - அகராதிகளைத் தொகுக்கும் செயலில் ஈடுபடுத்த லாம் ; ஒவ்வொரு சொல்லையும் இயன்றவரை படத்தால் விளக்கும்படி துண்டலாம். வெப்ஸ்டர் ஆங்கில அகராதியை இதற்கு முன்மாதிரியாகக் கொள்ளலாம். வகுப்பு இதழ்கள், பள்ளி இதழ்கள் ஆகியவற்றைக் கையெழுத்துப் பகுகளாக வெளியிடத் தூண்டலாம். அச்சுப் படிகளேவிடக் கையெழுத்துப் படிகள் வண்ணப் படங்கள் வரையவும், கட்டுரை கதை கவிதைகளின் தலைபபுக்களே அழகான எழுத்துக்களால் அணி செய்யவும் வாய்ப்புக்களை