பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 Q தமிழ் பயிற்றும் முறை

நல்கும். நல்ல திறமையும் முற்போக்குமுள்ள மாளுக்கர்களைச் சிறு நாடகங்கள், கதைகள், கட்டுரைகள், உரையாடல்கள் முதலியவற்றை வரையும்படி உற்சாக மூட்டலாம் ; இதனுல் எல்லோருக்குமே படைப்பாற்றல்களை வளர்க்க வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணுக்கர்களால் எழுதப்பெற்ற நாடகங்களே வகுப்பறையிலேயே நடிக்கும் வாய்ப்பினேயும் நல்கலாம். கீழ் வகுப்புக்களில் ஆட்டப் பாடல்கள், செவிலிப் பாடல்கள், பாப்பாப் பாடல்கள் முதலியவை பெரும்பயன் விளக்கும் ; இவற்ருல் மாளுக்கர்கள் மொழிப் பாடத்தை ஆர்வத்துடன் படிக்கத் துாண்டப் பெறுவர். புதிய முறைகள் சிலவற்றில் செயல்மூலம் கற்றல்’ என்ற கூறு ஊடுருவிச் செல்வதைக் கூர்ந்து கவனித்தால் தெரிய வரும்.

3. கற்பனவற்றை வாழ்க்கையுடன் இணைத்துக்காட்டல் : இயன்றவரை கற்பிக்கும் பொருள்களே வாழ்க்கையுடன் இணைத்துக் காட்டிக் கற்பிக்கவேண்டும். வாழ்க்கையுடன் ஒட்டிக் கற்பிக்காததால், கற்கும் மாணுக்கர்கள் கற்கும் நோக்கத்தை அறியாமல் கற்கின்றனர் ; கற்பனவற்றை விருப்பமின்றியும் ஆர்வமின்றியும் ஒரு சுமையாக எண் .ணியும் கற்கின்றனர். செய்திகளைக் கற்பிக்கும் பாடங்களே எளிதாக வாழ்க்கையுடன் இணைத்துக் கற்பிக்கலாம். ஆல்ை, மொழிப்பாடத்தை எங்ங்ணம் அவ்வாறு இணைத்துக் கற்பிப்பது ? கீழ் வகுப்புக்களில் செயல்திட்டமுயற்சி முறையில் கற்றல் நடைபெறுவதாகக் கொள்வோம். மாணுக்கர்கள் ஏதாவது ஒரு தொழிலைத் செயல் திட்ட வேலையாகத் தேர்ந்தெடுப்பர். இதுபற்றி வகுப்பு ஆசிரியரும் மாணுக்கர்களும் கலந்து ஆலோசிப்பர். எல்லோருக்கும் தத்தம் கருத்துக்களைத் தெரிவிக்கும் வாய்ப்புக்கள் அளிக்கப்பெறும்; இதல்ை வாய்மொழிப் பழிற்சிக்கு நல்ல இடம் கிடைக்கும். ஒவ்வொருவரும் செயல் திட்டம்பற்றிய குறிப்புக்களைக் குறித்துக்கொள்ள ஒரு நோட்டுப் புத்தகத்தை வைத்துக் கொண்டிருப்பர் ; எடுத்துக்கொண்ட வேலைபற்றிய குறிப் புக்கள், ஏதாவது கண்டகாட்சிகளே வருணித்து எழுதுதல்,