பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் அடிப்படை விதிகள் 8盟。

சிலவற்றை ஓவியங்களால் விளக்குதல் போன்றவை அந்தப் புத்தகத்தில் இடம் பெறும் ; இதல்ை எழுத்துப் பயிற்சிக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. எடுத்துக்கொண்ட வேலையை நிறைவேற்றுவதற்குச் சில பொருள்கள் தேவையாக இருக்கும். செயலை நிறைவேற்ற இசைவு கோரியும், தேவை யான பொருள்களைத் தரும்படியும் பள்ளித் தலைமை யாசிரியருக்கு விண்ணப்பங்கள் எழுதப் பயிற்றலாம். வகுப்பிலுள்ள ஒவ்வொருவரையும் விண்ணப்பத்தை எழுதச் செய்து "அவற்றுள் ஒரு சிலவற்றைத் தலைமை யாசிரியருக்கு அனுப்பச் செய்யலாம். இவ்வாறு, எழுத்து வேலைக்கும் ஊக்கம் தரப்பெறுவதுடன் அவ்வேலே குழந்தைகளின் வாழ்க்கையுடன் இணைக்கவும் பெறுகின்றது.

மேல் வகுப்புக்களில் இலக்கியம் கற்பிக்கப்பெறும்பொழுதும் அதை வாழ்வுடன் இணைத்துக் காட்டலாம். மாத்யூ ஆர்னல்டு கூறியுள்ளபடி, இலக்கியம் வாழ்க்கையின் திறனுய்வுதானே ? மேல் வகுப்பில் கம்ப ராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் நகர் நீங்கு படலத்தில் இலக்குவன் சீற்றத்தைக் குறிக்கும் * கேட்டான் இளையோன் ” என்று தொடங்கும் பாடலிலிருந்து சில: செய்யுட்களைக் கற்பிக்கும் வாய்ப்பு நேரும்பொழுது உலகில் நாம் பல குடும்பங்களில் உடன்பிறந்தவர்களிடையே நிலவும் அன்பின் தரத்தையும் இலக்கிய உலகில் கவிஞன் படைத்துக் காட்டும் உடன்பிறந்தவர்களிடையே நிலவும் பற்றினையும் ஒப்பிட்டுக் காட்டலாம். சாதாரணமாக இவ்வுலக வாழ்வில் உடன்பிறந்தவர்கள் குடும்பச் சொத்துக்களே நியாயமாகப் பிரிவினை செய்துகொள்ளாமல் நீதிமன்றம்வரை சென்று வழக்காடிப் பிரித்துக்கொள்வதையும், காவிய உலகில் சட்டப்படியும் மரபுப்படியும் மூத்தவன் பெறவேண்டிய அரச பதவியை அவன் வேண்டாமென்று கூறுவதையும், யாருக்காகக் கணவனுடன் வழக்காடி அரச பதவியைத் தாய் பெற்ருளோ அம் மகன் தனக்கு அப்பதவியும் செல்வமும் வேண்டாமென்று மறுத்து உதறித் தள்ளுவதுடன் நெறியல்லா