பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் அடிப்படை விதிகள் 63

பள்ளிச் சிருர்களுக்கென அமைக்கப்பெறும் ஒலிபரப்பு நிகழ்ச்சிகளும், பள்ளிகளில் கற்பிக்கும் துணைக்கருவிகளாகப் பயன்படும் பேசும்-படங்களும், அசைவுப்படங்களும் ஒரளவு பல்வேறு நிலை மாணுக்கர்களின் மனப்பான்மையை யொட்டித் தயாரிக்கப்பெறுகின்றன என்றும் சொல்லாம். பாடத்திட்டம் ஒரளவு நன்ருகத் தயாரிக்கப்பெற்ருலும்அன்ருடம் வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடங்களைக் கருத்துடன் கற்பிக்கவேண்டும். மொழிப் பாடங்கள் அனேத்தையும் கற்பிப்பதில் அக்கறையை உண்டாக்குவது எளிதன்று ; எத்தனையோ பாடங்கள் பன்முகப் பயிற்சிகளினுல் கற்கவேண்டி நேரிடும். கீழ் வகுப்புக்களில் விளையாட்டு முறைகளைக் கையாண்டு இப் பயிற்சிகளை அளிக்கலாம் ; மேல் வகுப்புக்களில் அவற்றின் இன்றியமையாமையை உணரும்படி செய்து அவற்றை மேற்கொள்ளும்படி துரண்டலாம். இயல்பூக்கங்களின் அடிப்படையில் செயல்களே அமைத்தல், கற்கும் அவசியத்தை மாணுக்கர் உணரும்படி செய்தல், வயதிற்கேற்ற பாடத் திட்டத்தை அமைத்தல், கற்கும் புதிய அறிவைப் பழைய அறிவுடன் இணையும்படி செய்தல் முதலிய செய்கைகளினல் மாணுக்கர்களிடம் அக்கறையை எளிதில் உண்டாக்கிவிடலாம்.

இவற்றை யெல்லாம் விட, கற்பிக்கும் ஆசிரியர் இன்முகத்துடனும், உற்சாகத்துடனும் அக்கறையுடனும் பாடத்தைத் தொடங்கினல் குறைமதியுள்ள மாளுக்கர்களும் பாடத்தில் அக்கறை காட்டுவர். அவ்வாறின்றி சிடுசிடுவென்ற தோற்றத்துடனும், அழுது வடிந்த முகத்துடனும், கடனுக்குக் கற்பிக்கும் பாவனையுடனும் வகுப்பில் நுழைந்தால் நிறைமதியுடைய மாளுக்கர்கட்கும் கற்றலில் கட்டாயம் வெறுப்புத் தட்டத்தான் செய்யும். இப்படியும் அப்படியும் ஒரு சிறு கம்பீரமான பார்வை, கருத்தை ஈர்க்கும் ஒன்றிரண்டு விளுக்கள், ஓர் அபிநயம் ஆகியவற்ருல் வகுப்பில் மின்விசையைப் போன்றதோர் சூழ்நிலையை உண்டாக்கித் தம்முடைய தோற்றத்தாலேயே மாணுக்கர்களிடையே உற்சாக அலைவீசும்படிச் செய்ய