பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


v{1

களுக்கிருக்கும் ஆங்கில மொழியின் ஞானம் சென்ற தலை முறையில் ஆங்கிலம் போதளுமொழியாக இருந்த காலத்தில் இருந்தமாதிரி இல்லே என்பது வெளிப்படை. ஆணுல், பலதுறைகளிலும் அறிவுத்தரம் மிகவும் உயர்ந்திருக்கின்ற தென்பது பாரபட்ச மில்லாமல் பார்ப்பவர்கள் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். தாம் படிப்பது, ஆங்கிலத்தைப் படிப்பதுகூட எதற்காக ? பல துறைகளிலும் அறிவு பெறுவதற்காக. தாய்மொழிமூலம் கல்வி புகட்டுவதுதான் குறைந்த காலத்தில் அதிக அறிவு பெறுவதற்கேற்ற வழி என்பது உலக முழுவதிலுமுள்ள அறிஞர்களின் அனுபவம். ஆணுல், இன்னும் ஏன்,கல்லூரிகளிலும் போதன முறை தாய்மொழி மூலம் அமைய்வில்லை என்ற வின எழுகின்றது.

இந்தக் காரணங்களை இங்கு ஆராயவேண்டிய அவசியம் இல்லை. இன்றில்லையாளுல், நாளே, அல்லது ஒன்றி. ரண்டு, அல்லது ஐந்தாண்டுகளில் படிப்படியாகத் தமிழ் போதன மொழியாவது உறுதி. புத்தகங்கள் இல்லையென்று சொல்லுகின்றவர்கள், அது போதன முறையானுலும், வெளிவரும் புத்தகங்களைக் கண்டு ஆச்சரிய்ப்படுவார்கள்.

ஆகுல், அதற்கு முன்னமேயே இப் புத்தகங்களே எழுத முன்வந்திருப்பவர்கள் மிகவும் பாராட்டுதலுக்குரியவர்கள். திரு. சுப்பு ரெட்டியார் மிகுந்த சிரமத்துடனும் சிரத்தையுடனும் பக்தியுடனும் இப் பணியைச் செய்திருக்கின்ருச். தமிழ் அன்னேயின்பால் தான் கொண்டுள்ள பேரன்பால், தமிழுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற பேரார்வத்தால் தூண்டப் பெற்று தமிழ் பயிற்றும் முறை என்ற இந்நூலே எழுதியிருக்கின்ருர். அவர் பணி அனைவருத்கும் பயன்படுவதாகுக. அவர் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளில் ஆண்டவன் துணை நிற்பாகை.

இங்ங்னம், தி. சு. அவிசிைலிங்கம்.

ரீ ராமகிருஷ்ணு மிஷன் :)

பெரியநாய்க்கன் பாளையம்,

80–9–57.