பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தமிழ் பயிற்றும் முறை

லிருந்து பகுதிக்குப் போதல் என்ற விதி குழந்தைப் பருவத்திற்குமட்டிலும் பொருந்தும் என்று கருதுதல்வேண்டா : எல்லா நிலைகளிலும் கற்றலில் இவ்விதி பெரிதும் பயன்படும். எடுத்துக்காட்டாக " மந்தரை சூழ்ச்சிப் படலத்தைப்’ பாடமாகக் கற்பிக்க நேரிடும்பொழுது துன்னருங் கொடு மனக் கூனி தோன்றுதல், அவள் கைகேயியின் கோயிலுக்குச் செல்லல், கைகேயியின் மனத்தைப் பலவிதமாக மாற்றுதல், சக்களத்தி (சககிழத்தி)ப் போராட்டத்தைத் தொடங்கிவைக்குந் திறன் போன்ற செய்திகளைப் பருந்து நோக்காகக் காட்டல் முதலியவை சிறந்த முன்னுரைகளாக அமையும். இதனுல் மாணுக்கர் தாம் கற்கப்போவதை முன்னரே அறிந்து கொண்டு உற்சாகத்துடன் கற்கக் கூடும். ஒரு சில விளுக்களால் இப்பகுதியை இராமாயணக் கதையுடன் இணைத்துக் காட்டவும் வாய்ப்பு உண்டாகும். இவ்வாறு கற்பித்த பகுதியைத் தனித்தனிச் சிறு பகுதிகளாகக் கற்கும்பொழுது அவற்றை மாணுக்கர்கள் ஒரு தொடர்புடன் கற்பர். حب

பெரும்பாலும் ஆசிரியர்கள் பாடப்பகுதியைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்துவிடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இப் படியைப் புறக்கணிக்கின்றனர். காரணகாரிய முறையில் தொடர்புகொண்ட பாடங்களைக் கற்பிக்கும்பொழுது இப் படியைப் புறக்கணித்தால் பெருந்தீங்கு விஜளயக்கூடும் ; மாணுக்கர்கள் புதிதாக அறிபவற்றைத் தெளிவாக அறியார். இலக்கணப் பகுதிகளைக் கற்பிக்கும்பொழுது இப் படியின் இன்றியமையாமையை ஆசிரியர்கள் நன்கு உணர்வர். ஆசிரியர் வகுப்பை நன்கு அறிந்திருந்தால் இப் படியில் அவர் அதிக நேரத்தைக் கழிக்க வேண்டிய அவசியம் இல்லை. முன்பாடத்தில் ஒரு சில வினுக்களை விடுத்து வகுப்பைத் தயார்செய்து கொண்டு கற்பிக்கவேண்டிய புதிய பாடத்தில் விரைவாக, நேராக இறங்கிவிடலாம். ஆசிரியர் வகுப்பைப்பற்றி நன்கு அறி. யாதிருந்தால் சில வினுக்களை விடுத்து வகுப்பின் அறிவு நிலயை அறியவேண்டும் ; இதற்காகவே பல மணித்துளி