பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் அடிப்படை விதிகள் 67

களைக் கழிக்கவேண்டியும் நேரிடும். பயிற்சிக் கல்லூரி களில் பயிற்சி பெறும் மாளுக்கர்களுக்கு இவ்வனுபவம் அடிக்கடி நேரிடும் ; புதிய புதிய வகுப்புகளைக் கற்பிக்க நேரிடுவதால் இந்நிலை ஏற்படுகின்றது. கற்பிக்கத் தொடங்குவதற்கு முன் அவ்வகுப்பைப் பற்றி ஒரளவு அறியும் வாய்ப்பினைக் கொடுத்துக் கற்பிக்கும் பணியை மேற் கொள்ளச் செய்தால் அவர்கள் தரும் பயிற்சிப் பாடம்: சிறப்பாக அமையக் கூடும்.

um L. Gibráðið (Statement of the aim) :-sohoffluff முதற்படியிலிருந்து இரண்டாவது படிக்குச் செல்வதற்கு முன்னர் மாணுக்கர்கட்குப் பாட நோக்கத்தைத் தெளிவுறச் செய்தல் வேண்டும். ஆசிரியரும் மாணுக்கர்களும் புதிதாக உண்மை காணும்பணியில் ஈடுபடுவதாகக் கருதப்படுவதால் மாணுக்கனை ஆசிரியரின் நம்பிக்கைக்குப் பாத்திர மாகச் செய்துவிடவுேண்டும். இளஞ்சிருர்களைப் பொறுத்த மட்டிலும்,-அவர்கள் வேலையையும் விளையாட்டையும் ஒன்ருகப் பாவிப்பதால்-பாட நோக்கத்தை முன்னரே உணர்த்தத் தேவையில்லை. வளர்ந்த மாணுக்கர்களுக்கு முன்னரே நோக்கத்தை அறிவித்தால்தான் அவர்கள் உற்சாகத்துடன் கற்பர். முதற்படியில் சரியான கவனம் செலுத்தப்பெற்ருல் பாடத்தின் நோக்கம் நன்ருகப்புலப்பட்டுவிடும். காஃபி என்ற உரைநடைப் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர் காஃபி என்ற சொல்லே மாணுக்கரிடமிருந்து வருவிப்பதற்குக் காலேயில் என்ன குடித் தீர்கள் ? என்று கேட்டால், அது சிந்தித்த விவ்ைன்று என்று கூறி விடலாம். காஃபி” என்ற விடையை எதிர்ப்பார்த்தல் என்பது உறுதியன்று. மோர், பழையது, ஒவல்டின், தேநீர் என்ற விடைகள் எல்லாம் இதற்குப் பொருந்தும். இதையே சிற்றுண்டிக்குப் பிறகு தேநீருக்குப் பதிலாக உன் அன்னே உனக்கு எதைப் பருகுவதற்குத் தருவார்? என்று கேட்டால், விரைவாக காஃபி என்ற விடைக்கு வருதல்கூடும். சிந்தனையின்றி இவ்வாறு வினவி மாணுக்கரின் கவனத்தைச் சிதைப்பதைவிட, பாட நோக்கத்தை ஒரு