பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7G தமிழ் பயிற்றும் முறை

மாகவும் அறியும் திறன்களைப் பெறவில்லை என்று எண்ணுகின்றனர்; அன்றியும், புலனிடான (Concrete) காட்சிகளைக் கருத்துநிலக்காட்சிகளாகக் (Abstraction)காணும் ஆற்றல இன்னும் அடையவில்லை என்றும் கருதுகின்றனர். இது. தவருன கருத்தாகும். சுருக்கம் கூறும் நிலையில் கருத்து நிலைக்காட்சி என்பது வேறு ; புலனிடான அறிவுநிலையிலிருந்து நுண்ணுணர்வு நிலைக்குப் போதல் வேறு. எடுத்துக்காட்டாக நரியும் காக்கையும்’ என்ற கதையைக் கற்பித்தபின் நாம் ஒருவரை ஏமாற்றில்ை பிறர் நம்மை ஏமாற்றுவர்” என்ற உண்மையைக் காணத்துரண்டுவது என்பது சிறு மாணுக்கர்கள் அறியமுடியாத நிலையன்று. எனவே, இதைத்தான் ஒப்பிட்டு நோக்கல் என்று கொள்ள வேண்டும். கணிதம், அறிவியல், இலக்கணம் ஆகிய பாடங்களில் இளஞ்சிருர்களுக்கும் இப் படி வேண்டற் பாலதே. இலக்கியம், வரலாறு போன்ற பாடங்களில் வேண்டுமாளுல் அறிவு வளர்ந்து ஆராய்ச்சித் திறன் எய்தும்வரை இதை நீக்கி வைக்கலாம். ஆணுல், மேல் வகுப்புக்களில் இப்பாடங்களிலும் இப் படி இன்றியமை யாததே.

இப் படியில் இரண்டு குறிப்புக்களே ஆசிரியர்கள் நினைவிலிருத்தவேண்டும். ஒப்பிட்டு நோக்கப்படும் இரண்டு. பொருள்கள் அல்லது கருத்துக்கள் மாளுக்கர்கள் அறிந்தவையாக இருக்கவேண்டும். தெரிந்த ஒன்றைத் தெரியாத பிறிதொன்றுடன் ஒப்பிட்டு ஆராய்வதால் பயன் இல்லை. எடுத்துக்காட்டாக அன்மொழித்தொகை கற்பிக்கப் பெறும் பொழுது அதை ஆகு பெயருடன் ஒப்பிட்டு ஆராய வேண்டுமானுல் ஆகுபெயரைப்பற்றியும் அவர்கள் அறிந்திருக்கவேண்டும். இவ்வாறு ஒப்பிட்டுப் பார்ப்பதில் ஏதாவது பயன் இருக்கின்றதா என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். ஆகு பெயரையும் அன்மொழித்தொகையையும் ஒப்பிட்டு நோக்குதலால் இரண்டன் அறிவும் வலியுறுகின்றது. இவைபோன்றவற்றைத்தான் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.