பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் அடிப்படை விதிகள் 7 ?

பொது விதி காணல் (Generalisation) : மனம் புதுப்பொருள்களை அறியும்பொழுது அஃது அவற்றை ஏற்கெனவே அறிந்தவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை மேலே கண்டோம். இவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்துப் பொதுமையாகக் கண்ட வற்றைத் தொகுத்து ஒரு விதியாகவோ, ஒரு பொது உண்மையாகவோ ஆக்குதலைத்தான் பொதுவிதி காணல்" என்று கூறுவர். பாடத்தின் நோக்கம் இப் படியில்தான் முற்றுவிக்கப் பெறுகின்றது. ஒப்பிட்டுப் பார்த்துப் பொதுவிதிகாணுதலில் மாணுக்கரின் பங்கு அதிகமிருத்தல்வேண்டும்.அவர்களாகவே விதியினைக் காணவேண்டும்; அவசரப்பட்டு ஆசிரியர் குறுக்கிட்டு விதியை உண்டாக்கக் கூடாது. வேண்டுமானுல் அவர்களாகக் கண்டறிந்த விதிக்கு ஆசிரியர் சரியான உருவம் கொடுப்பதில் துணே புரியலாம்; அதைச் செப்பமும் செய்யலாம். அவ்விதியைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ என்ற முறையில் அழகான சொற்ருெடரில் அமைத்து எழுதியுங் காட்டலாம். விதிவரு sól&Ssð Gpsopu^sb (Inductive method) sölS$Ss6sd Stj படி மிகவும் இன்றியமையாதது.

அவனே --கண்டான்-அவனைக் கண்டான் கோயில-சுற்றினன்-கோயிலைச் சுற்றினன் கடவுளே + தொழுதான்-கடவுளேத் தொழுதான் பாடத்தை +படித்தான்-பாடத்தைப் படித்தான்

என்ற எடுத்துக்காட்டுக்களே மாணுக்கர்கள் கவனித்து ஒன்ருேடொன்றை ஒப்பிட்டு நோக்கினுல் இரண்டாம் வேற்றுமையுருபிற்குமுன் வல்லெழுத்து முதன்மொழி வரின், அவ்வல்லெழுத்து மிக்கே வரும் என்பதை உணர்வர்; இதை ஒரு விதியாகவும் கொள்வர். இலக்கணம், ஒரு சில மொழிப் பகுதிகள், அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் இப் படி பெரும்பயன் விளைவிக்கும். தேர்ந்தெடுத்த திறமையான சில விளுக்களைக் கையாண்டு ஆசிரியர் மாணுக்கர்களைக் கொண்டே இவ்விதிகளை வருவிக்குமாறு செய்யவேண்டும். இலக்கியத்தில் சில பாடங்