பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தமிழ் பயிற்றும் முறை

படாத செய்திகளைப் படிப்படியாக விளக்குதல் வேண்டும். தெரிந்தவற்றை அதிகமாக விளக்குவதாலும் மாணுக்கர் சலிப்படைவர்; தெரிந்தவற்றுடன் பொருத்தாமல் தெரியாதவற்றையே விளக்கிக்கொண்டிருந்தாலும் மாணுக்கரிடம் ஓர் அலுப்பு உண்டாகும். சலிப்பும் அலுப்பும் ஏற்படாதவாறு கற்பித்தலே ஆசிரியருடைய திறமையாகும். இலக்கணப் பாடங்களில் இக்குறிப்பு நன்கு பயன்படும். எடுத்துக் காட்டாக திணையைக் கற்பிப்பதில் இராமன், குதிரை, மரம், கல் என்றவை பெயர்ச் சொற்கள் என்பதாக மாணுக்கர் அறிந்துள்ள அறிவைக் கொண்டு திணை' என்ற புதிய கருத்தைக் கற்பிக்கலாம். இராமன் பகுத்தறியும் அறிவு உள்ளவன்; குதிரை பகுத்தறியும் அறிவு இல்லாதது; மரம் ஊற்றுணர்ச்சி உள்ளது; கல், அறிவே அன்றி உயிரும் இல்லாதது என்பதை உணர்த்தி, பகுத்தறியும் அறிவுள்ள உயிர்களை மட்டும் ஓர் இனமாகவும், மற்றைய எல்லாவற்றையும் ஓர் இனமாகவும் ஆன்ருேர் வகைப்படுத்தி யுள்ளனர் என்றும், பகுத்தறிவுடையவர்களேக் குறிக்குஞ் சொல் உயர்திணைச் சொற்கள் என்றும், பகுத்தறிவு இல்லாதவற்றைக் குறிக்குஞ் சொற்கள் அஃறிணைச் (அல்+திணை) சொற்கள் என்றும் இலக்கணத்தில் குறிக்கப் பெற்றுள்ளமையை விளக்கலாம். -

(pop:#655, guð3)&@i Gumgá (From the whole to the part): அதாவது குழந்தைகள் அறிந்துள்ள முழுப் பொருளைப் பிரித்துப் பகுதிகளைக் கற்பிக்கவேண்டும் என்பது இதன் பொருள். படிப்புக் (reading) கற்பிப்பதில் கையாளும் சொற்ருெடர்முறை இதை அடிப்படையாகக் கொண்டது. நாம் சொற்ருெடர்களாகவே பேசுகின்ருேம்; குழந்தைகளும் சொற்ருெடர்களாலேயே தம் கருத்தை வெளியிடுகின்றனர். சொற்ருெடரே எண்ணத்தைத் தெரிவிக்கும் மொழியின் முக்கிய உறுப்பாகும். பரந்தாமன் பந்து ஆடுகின்ருன்’ என்ற சொற்ருெடர் குழந்தைகளின் பட்டறிவிலுள்ள ஒரு நிகழ்ச்சி. இதைக் கரும்பலகையில் பெரிய எழுத்துக் களால் எழுதி (தேவையானல் படத்தாலும் விளக்கி) அதை முழு வாக்கியமாகப் படிக்கச் செய்யவேண்டும். பிறகு