பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

100

எனத் திருவடியைச் சிறப்பித்துச் சொல்லியிருக்கிருர், வயிர வருக்கு உருவம் உண்டு என்பதைத் திருமூலரும் திருமந்திரத் தில் குறிப்பிட்டிருக்கின்ருர். அவருடைய திருவுருவத்தையும், அவருடைய திருக்கரங்களில் அம்மூர்த்தி கொண்டுள்ள படை களையும் விளக்குகின்ருர். மேலும், அவர் நிறம் செம்மை என்பதாகவும் குறிப்பிட்டுச் சொல்கிரு.ர். இவற்றைக் காட்டும் பாடல்கள், . -

'ஆமே அப் பூண்டருள் ஆதி வயிரவன்

ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டங்கு ஆமே தமருக பாசமும் கையது ஆமே சிரத்தொடு வாடது கையே

'கையது ஆறும் கருத்துற நோக்கிடும்

மெய்யது செம்மை விளங்கு வயிரவன் துய்ய ருளத்தில் துளங்கும்மெய் யுற்றதாய்ப் பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.”

இங்கே திருமூலர் வயிரவருடைய திருமேனியைச் சொல் லும் போது, மெய்யது செம்மை விளங்கு வயிரவன் என்கிரு.ர். இதனால் இறைவரும் வயிரவரும் ஒருவரே என்பதை உளத்தில் கொள்ள வேண்டும்.

'சிவனெனும் காமம் தனக்கே உரிய

செம்மேனி அம்மான்'

என்பது திருநாவுக்கரசு சுவாமிகளுடைய வாக்கு. வயிரவருக்கு ஆறு திருக்கரங்கள் இருப்பனவாகவும் சொல்கிரு.ர். பகைவர் களை ஒறுப்பதற்காகவும், பக்தர்களைக் காப்பதற்காகவும் రాశిg! திருக்கரங்களிலும் அவர் கொண்டுள்ள ஆயுதங்களையும் குறிப் பிடுகிருர். இவ்வாறு தெய்வங்கள் தம் திருக்கரங்களில் ஆயுதங் களைக் கொண்டு பகைவர்களை வென்று அன்பர்களைக் காத்து வருவர் என்பதை நக்கீரர் தாம் அருளிய திருமுகாற்றுப்படை யுள,