பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

f{}}

வாய்மை ஏற்பட்டு விடுகிறது. ஆகவே தூய்மை வேண்டு மென்ற கருத்தை பொய்வகை விட்டு நீ பூசனை செய்யே, என்று இதனையே இன்றியமையாததாக எடுத்துரைக்கின்ருர் ஆசிரியர். பொய்யுள்ளம் படைத்தவரின் பூசனையைக் கண்டு இறைவன் எள்ளி நகையாடி அவர்களை அணுகாது விலகுவான் என்பதை, ஆளுடைய அரசர்,

'பொக்க மிக்கவர் பூவும் நீரும்கண்டு நக்கு நிற்பன் அவர்தமை காணியே’

என்று குறிப்பிட்டுள்ளார். இனி வயிரவப் பெருமானைப் பூசிக்கும் முறைபற்றியும், அருச்சனை செய்கிற முறைபற்றி யும் சிறிது சிந்திப்போமாக.

இந்தக் காலத்தில் கர்ப்பூரம்போன்ற ஒளிதரும் பொருளை இறைவனுக்குத் தீபாராதனை என்கிற முறையில் காட்டுகிருேம். மிகப் பழையகாலத்தில் இந்தக் கர்ப்பூர தீபாரானை இருந்ததாகப் புலகைவில்லை. துப தீபமே ஆராதனைக்குரியவையாக இருந்தன என்பதை, அப்பர் பெரு மானர் திருவாக்கின் மூலம் தெரியலாம். அவர்,

"தூயமொடு தீபம்’

என்றுதான் குறிப்பிடுகின்ருர். இதல்ை கர்ப்பூரம் காட்டுவது பிற்காலத்திலெழுந்த வழக்கம் என்பது தெரிகிறது.

நான் டெல்லிக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள லட்சுமி நாராயணன் கோயிலில் கர்ப்பூரம் காட்டும் வழக்கம் இல்லை என்பதையும் அறிந்தேன். இந்த முறை நமது திருமந்திர ஆசிரியருடைய காலத்திலும், அப்பர்"சுவாமிகள் காலத்திலும் இருந்தது என்றே குறிப்பிட விரும்புகிறேன்.

பொய்யை விட்டு மெய்யளுக எந்த வகையில் பூசிக்க வேண்டும் என்னும் வின எழும் அன்ருே? அந்த வினவிற்கு விடையாகத் திருமூலர் என்ன அறிவிக்கின்ருர்?