பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107


சிவமயம்

திருச்சிற்றம்பலம் தமிழ் மந்திரம்

விநாயகர் வணக்கம்

விநாயகனை உள்ளத்தில் அமர்த்திப் போற்றுதல்

1. ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

(இதன் பொருள்) ஐந்து கைகளையும், யானை முகத்தை யும், இளம்பிறைச் சந்திரனைப் போன்ற வளைந்த தந்தத் தையும் உடைய சிவபெருமானின் திருமகனும், அறிவுக் கொழுந்தாக உள்ளவனுமான விநாயகனை உள்ளத்தில் வைத்து, அவன் திருவடிகளையும் போற்றுகின்றேன்.

(அருஞ்சொல்) இந்து - சந்திரன். எயிறு - தந்தம். நந்தி - சிவபெருமான். புந்தி - மனம்.

(விளக்கம்) நான்கு கைகளுடன் தும்பிக்கையையும் விநாயகன் பெற்றிருத்தலின், ஐந்து கரத்தன் எனப்பட்டான். தந்தம் வளைந்து இருப்பதால் பிறைச்சந்திரன் போன்ற தந்தம் எனப்பட்டது. பிறைச்சந்திரன் வடிவம் வளைவுடையது. விநாயகர் என்பார் பிரணவ வடிவினர் ஆவர்.