பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

i iš

உள்ளத்தில் திளைக்கின்றவன். இத்தகைய இயல்புடைய ஈசனைப் போற்றி, எம்பெருமான் என்று சொல்லி வணங்கி, நண்பன் என்று கருதி வழிபட்டால், அவன் அருளேப் பெறலாம். . (அ- சொ) தீர்த்தன் - பரிசுத்தன். ஆத்தன். நண்பன். (விளக்கம்) ஈசன் அருள்பெற அவனை வாழ்த்த வேண்டும். மனத்தை தூயதாக்கிக் கொள்ளவேண்டும். அவனை நண்பனுக் கிக் கொள்ளவேண்டும். w

தேவரும் அசுரரும் அவன் அடி போற்றுவர் 13. போற்றிஎன் பார் அமரர்.புனி தன் அடி போற்றிஎன் பார் அசுரர்.புனி தன்அடி போற்றிஎன் பார்மனி தர்புனி தன் அடி போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே. (இ - ள்) தேவர்கள் பரிசுத்தனை இறைவன் திருவடி களைப் போற்றி என்பர். இராக்கதர்களும் அவன் பாதங் களைப் போற்றி என்பர். மண்ணுலக மக்களும் அவனைப் போற்றி என்பர். ஆகவே, யானும் என் அன்புடைய அகத்துள் அவன் திருவடிகள் விளங்கும்படி வைத்துப் போற்றி வணங்குவன்.

(அ- சொ) அமரர் - தேவர். அசுரர் - அரக்கர். பொலிய விளங்க. .

(விளக்கம்) இறைவன் திருவடி அருளுக்கும் ஞானத்திற் கும் இடம்; ஆதலின் தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் போற்றி வணங்குவர் என்பது கருத்தாம்.

இறைவனை கினையாதவர்கட்கு இன்பம் இல்லை 14. மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்

வினையுள இருந்தவர் நேசத்துள் நிற்பர் பனையுள் இருந்த பருந்தது போல நினையா தவர்க்கிலை கின்இன்பம் தானே.