பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

116

(இ - ள்) இல்லறத்திற்கு இடமான வீட்டில் இருப்பி

னும், தத்தம் கடமையினைச் செய்து வருவாராயின்,பெருந் தவம் செய்டிம் தவசிகட்கு ஒப்பாவர் இல்லறத்தார். இறை வனது நினைவாகவே இருந்தவர், இறைவனது நட்புரிமை யில் நிற்பவர் ஆவர். இங்ங்ணம் இறைவன் நினைவு இல்லாத வர்க்கு இன்பம் இல்லை. அது எதுபோல் எனின், பழத்தை யுடைய பனைமரத்தில் பருந்து வந்து தங்கியும், அப்பழத்தை உண்ணவேண்டும் என்ற நி னை ைவ அது பெருதது போலாம். -

(அ- சொ) மனை - வீடு. மா - பெரிய. - -

(விளக்கம்) இல்லறத்தில் ஈடுபட்டாலும், இறைவன்ை மறவாது இருப்பின், அவர்கள் பெரியவர் ஆவர். மேலும் இறைவனுக்கு நண்பரும் ஆவர். ஈசன் ஒருவன் உளன். அவனை நினைக்க வேண்டும் என்னும் உணர்ச்சி பெருதவர், பழம் இருந்தும் உண்ணவேண்டும் என்ற உணர்வு பெருத பருந் துக்கு ஒப்பாவார் என்பதாம்.

இறைவன் அவியா விளக்காவான்

15. அடியார் பரவும் அமரர் பிரான

முடியால் வணங்கி முதல்வனே முன்னிப் படியார் அருளும் பரம்பரன் எங்தை விடியா விளக்கென்று மேவிகின் றேனே. (இ - ள்) அடியவர்கள் தேவர்களின் தலைவனப் போற்றி என் சென்னியால் வணங்கினேன். அம் முதல் பரம்பொருள் என எண்ணினேன். அவனே உலகர்க்குத் தந்தையும், அருள் செய்யும் மேலான பரம்பொருள் அவனே தான் ஆவான். அவன் அணையா விளக்கு என்று உணர்ந்து, அவனை அடைந்தேன்.

(அ- சொ) பரவும் - வணங்கும். அமரர் - தேவர். பிரான் . தலைவன். முன்னி - நினைத்து. படியார் - உலகில் உள்ளவர்கள். விடியா - அணையாத, -