பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

#15

கைவிட்டு, வளமான வேதத்தை ஒதியே மோட்ச வீட்டை அடைந்தனர்.

(அ - சொ) அறம் தருமம். ஓத சொல்ல. மதிஞர் - அறிஞர்கள். வீடு - மோட்சம்.

(விளக்கம்) மக்கள் ஒழுகவேண்டிய முறைகளே ஈண்டு அறம் எனப்பட்டது. அம்முறைகள் அனைத்தையும் வேதத்தில் காணலாம். அதனுல்தான் வேதத்தில் அறம் எலாம் உள எனப்பட்டது. வேதத்தை ஒதுதல் ஆவது, வேதம் ஓதி அதன் படி நடத்தல் என்பது.

இறைவன் அறிவித்தால் அன்றி ஆகமப்பொருளை அறிய ஒண்ணுது

18. அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்

விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது அண்ணல் அறைந்த அறிவறி யாவிடின் எண்ணலி கோடியும் நீர்மேல் எழுத்தே. (இ - ள்) இறைவன் ஆகமங்களை அருளிச் செய்தது அவனது பேர்அருள் காரணத்தால் ஆகும். இத்தகைய சைவ ஆகமத்தின் உட்பொருளைத் தேவலோகத்தில் உள்ள தேவர்களும் விளங்கிக்கொள்வது அருமையாகும். அண்ண லாம் சிவபெருமான் கூறியுள்ள சிவாகமத்தின் மெய்ப் பொருளே உணரவில்லை எனில், இந்த எண்ணற்ற பலவாகிய ஆகமங்கள், நீர் மேல் எழுத்துப்போலப் பயன் தராமல் போகும்.

(அ- சொ) அண்ணல் - பெருமையில் சிறந்த சிவபெருமான். விண்- தெய்வலோகம். அமரர் - தேவர். அறைந்த - அறிவித்த நுண் பொருள்கள்.

(விளக்கம்) ஆகமம் என்பது ஒரு சமயத்திற்குரிய சிறப்பு நூல் ஆகும். ஆகமத்தில் ஆலய அமைப்பு, இறை வழி பாடு.