பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

#35

ஆகமங்களை அறிவித்தவனை நாம் அறிதல் வேண்டும்

20. அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறும் சிமிட்டலப் பட்டுயிர் போகின்ற வாறும் தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ் விரண்டும் உணர்த்தும் அவனை உணரலும் ஆமே. (இ) - ள்) உயிர்கள் பந்தத்தினின்று விடுபடுதலையும், உட்படுதலையும், பிறப்பினின்று உயிர் விடுபட்டுப் போகும் விதமும் ஆகிய இவை அனைத்தையும், தமிழ்மொழி வடமொழி ஆகமங்களின் மூலம் அறிவிக்கும் இப்பரம் பொருளை நாம் உணர்தல் வேண்டும்.

(அ - சொ) சிமிட் டலைப்பட்டு , பிறப்பினின்று நீங்கும் விதமும் அறிந்து.

(விளக்கம்) ஆகமத்தை உணர்ந்தால், உயிர் பந்தபாசங் களால் கட்டுப்படும் காரணத்தையும், அக்கட்டினை நீக்கிக் கொள்ளும் வழி வகைகளையும், உயிர்கள் பிறப்பினின்றும் விலகி நற்கதி செல்லும் விதத்தினையும் அறிந்து கொள்ளலாம்.

கந்தியம்பெருமாள் அருள்பெற்றவர்கள் எண்மர்

21. கந்தி அருள்பெற்ற காதனை நாடினன்

கந்திகள் கால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் என்றிவர் என்னுெடு எண்மரும் ஆமே.

(இ - ள்) நந்தியம்பெருமாளுர் உபதேசம் பெறு தலாகிய திருவருளைப்பெற்ற தலைவர்கள் யாவர் என ஆராய்ந்தால், நந்தியம் பெருமான் போன்ற ஞானசிரியர் களாக விளங்கும் நால்வர் சிவயோகமாமுனிவர், சிதம்பர ஞானசபையினை வணங்கிய பதஞ்சலி பகவான் வியாக்கிர பாத முனிவர் என்ற இவ்வெழுவருடன், என்னேயும் சேர்க்க எண்மர் ஆவோம்.