பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

i26

தம் நிலையினை வெளியிடல்

28. பாடவல் லார்கெறி பாட அறிகிலேன்

ஆடவல் லார்கெறி ஆட அறிகிலேன் காடவல் லார்நெறி நாட அறிகிலேன் தேடவல் லார்நெறிதேடகில் லேனே. (இ - ள்) பாடவல்லவர்கள் பாடிக்காட்டிய வழியில்

யான் பாட அறிந்திலேன். ஆடவல்லார் ஆடிக் காட்டிய

வழியில் ஆடவும் அறியேன். நாட வல்லார் வழியினை

நாடவும் அறியேன். தேடிக் காணும் வன்மையுடையார்

சென்ற வழியினை யான் தேடவும் இல்லையே.

(அ-சொ) நெறி-வழி

(விளக்கம்) இறைவனே அடையும் மார்க்கம் பலவகை. அவற்றுள் இரண்டைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். ஒன்று பாடல் நெறி; மற்முென்று ஆடல் நெறி. ஆடல் நெறி என்பது மனம் உருகித் தம்மை மறந்து ஆனந்தக் கூத்தாடுதல், பிறர் செய்யாததைத் தாம் செய்யாதது போலத் திருமூலர் இங்குக் கூறுகிருர். இதன் கருத்து யாரும் நல்வழிப்பட வேண்டும் என்பதற்காக என்க.

திருமூலர் திருமந்திரம் மூவாயிரம் 29. மூலன் உரைசெய்த மூவாயிரந்தமிழ் ஞானம் அறியவேகந்தி அருளது காலை எழுந்து கருத்தறிந் தோதிடின் ஞாலத் தலைவியை கண்ணுவர் அன்றே. (இ - ள்) திருமூலர் திருவாய் மலர்ந்தருளிய திருமந் திரம் தமிழாம் மூவாயிரம். அவை உலகம் உணர நந்தியம் பரமன் அருளால் திருமூலர் மூலம் வெளியாயின. ஒவ்வொரு நாளும் காலையில் அம்மத்திரங்களின் உண்மைப் பொருளை உணர்ந்து பாராயணம் பண்ணில்ை, உலக