பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை, புரசைவாக்க

மகா வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை

திருமூலர் என்னும் சித்த புருடர், ஆண்டுக் கொன்ருப் மூவாயிரம் ஆண்டுகள் வரை மூவாயிரம் மந்திரங்களை அருளிச் செய்தனர் என்றும், அவை திருமந்திர மாலை' என வழங்கப் பட்டுச் சைவத்திருமுறைகளுள் ஒன்ாகக் கொண்டாடப்பட்டு வருகின்ற தென்றும் அறிகிருேம், சித்த புருடரான திருமூலர் திருமந்திரங்களுக்கு உண்மைப் பொருள் கண்டறிவது எளிய செயலன்று.

இத்தகைய மந்திர நூலுக்குத் துணிந்து உரை கண்ட சைவப் பேரறிஞர்களைப் பின்பற்றி, எனது அன்பிற்குரிய இயற்றமிழ் ம்ாண்வரும், செந்தமிழ்ச் செல்வர், சைவ சமய சிரோமணி, பேராசிரியர் என்னும் சிறப்புகளையுடையவரும், சென்னைப் புதுக்கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவருமாகிய வித்துவான் பாலூர் கண்ணப்ப முத்வியார், எம். ஏ., பி.ஒ எல் சித்த புருடர் ஆண்டுக் கொன்ருகப் பாடியருளிய அருமந்திர மாகிய திருமந்திரத்தைத் தம் ஆன்ம ஈடேற்றத்திற் கருத்து டைய அன்பர் பலரும் நாளுக்கொன்ருகப் பயின்று ஒராண் டிற்குள் உறுபயன் பெறக்கருதி 365 மந்திரங்களைத் தேர்ந் தெடுத்து, அவற்றுக்கு விரிவான முறையில்'உரை விளக்கஞ் செய்து, இந்நூலை வெளி பிட்டிருக்கிார். அவரது இந் நன்முயற்சியை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.

அன்பரவர்கள், அண்மையில் மகாவித்துவான் மீட்ைசி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத் தமிழுக்கு விளக்க உரைகண்டு, தொள்ளாயிரத்தெட்டுப் பக்கங் கள் கொண்ட பெரு நூலைத் திருப்போரூர் பூரீகந்தப்பெருமான் தேவத்தான வெளியீடாக வெளியிடச் செய்தார். அவ்வெளி யீட்டைச் சென்னை முதலமைச்சர், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமையில் வெளியிட்டருளினர். உரையா சிரியருக்கு அவ்வமயம் பொற்கிழியளித்துப் பொன்னடை போர்த்தித் தேவத்தானத்தவரால் பாராட்டு வழங்கப்பட்டது.

திருநூல்களை இடையருது ஒதுவதும், பொருள் காண்பதும், உரைவிளக்கம் செய்வதும், சொற்பொழிவாற்றுவதும் கடமைத் திருப்பணியெனக் கருதிச் செய்துவரும் அன்பரவர் களுக்குச் செல்வமுங் கல்வியும் நீடிய ஆயுளும் இறைவன் திருவருளால் ஓங்கவேண்டுமென அன்பு கனிந்து வாழ்த்து கிறேன். - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மந்திரம்.pdf/13&oldid=571190" இலிருந்து மீள்விக்கப்பட்டது