பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

130

பாசம் என்றும் ஆன்மாவை உலக பத்தத்தில் ஈடுபடுத்தும். அதல்ைதான் பதியினைப் பசு அணுகமுடிவதில்லை. பசு குருவின் உபதேசத்தால் பதியை அணுகின் பாசம் விட்டொழியும். இந்த உண்மையினைத்தான் தட்சிணுமூர்த்தி சுவாமி சனகாதி யர்கட்கு உபதேசம் செய்தனர்.

ஆசாரியன் முன் மலங்கள் அற்றுப்போகும்

34. சூரிய காக்தமும் சூழ்பஞ்சும் போலவே

சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதி யில்சுடு மாறுபோல் சூரியன் தோற்றமுன்அற்ற மலங்களே.

(இ-ஸ்) சூரியனுடைய ஒளியை ஏற்று வெளிவிடும் சூரியகாந்தக் கல், சூரியன்முன் அன்றித் தன்னருகே பஞ்சு சூழ்ந்திருப்பினும் பஞ்சைச் சுட்டு எரிக்கமாட்டாது. சூரியன் முன்தான் சுட்டு எரிக்கும். அதுபோலவே ஆசாரியன் முன்னே மாணவனைப்பற்றி நின்ற மும்மலங் களும் அற்றுப் போகும்.

(அ- சொ) சூரியகாந்தம். சூரிய ஒளிபெற்று வெம்மையை வெளிக்காட்டும் ஒருவகைக் கல். சந்நிதி - முன், சூரியன் , ஆசாரியன். அற்ற - நீங்கின. மலங்கள் - ஆணவம், கன்மம், மாயை என்னும் முக்குற்றங்கள். ஆணவமாவது அகங்காரம்: கன்மம் என்பது மயக்க உணர்வால் செய்யும் தீய செயல்கள்; மாயையாவது பொய் உணர்வு. -

(விளக்கம்) சூரியகாந்தக்கல் முன் பஞ்சைப் பிடித்தால் பஞ்சை எரிக்கும் ஆற்றல் அதற்கு ஏற்படாது. ஆனல் சூரியன் ஒளிமுன் இக்கல்லேப பிடித்து அதற்கு முன் பஞ்சை வைத்தால் அப்பஞ்சு எரிந்துபோம். அதுபோலத்தான் ஆசாரியன் முன்னே ஆன்மாவைப் பற்றிய மலங்கள் அறும் என்பது அழகிய உவமை யால் விளக்கப்பட்டது.