பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

iss

களே ஆன்மா சென்றடைவதற்குரிய வீட்டின்பத்திற்கும் உரியனவாய் விளங்குவன. மேலும், கூறத்தொடங்கினல் சரண்புக வேண்டிய இடம் அந்தத் திருவடிகளே அன்றி வேறில்லை. இந்த உண்மைகளை உன்ளத்தால் உண்மையினை அறிந்த ஞானிகள்தாம் அறிவர்களே அன்றி, வேறு எவரும் அறியார். .

(அ சொ) கதி உயர்நிலை. செப்பில் கூறினல், தஞ்சம். சரணுகதி. தெளிவோர் - உணரும் ஞானிகள் . -

(விளக்கம்) ஆசாரியனது திருவடி சாதாரணத் திருவடி அன்று என்பதும், அதனை எப்போதும் நினைப்பவர், எல்லாம் அடையப் பெறுவர் என்பதும் ஈண்டு விளக்கப்பட்டன.

கல்மாணவன்கடமை

33. தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே. - (இ - ள்) ஆசாரி ய ர து அழகிய வடிவத்தைத் தரிசிப்பதே அறிவின் விளக்கமாகும். அவருடைய திருப் பெயரை உச்சரித்தலே நம் அறிவிற்கு விளக்கம் ஆகும். அவருடைய சிறந்த உபதேசங்களைக் கேட்டலே அறிவின் தெளிவாகும். அவருடைய வடிவத்தை உள்ளத்தில் நிலையாகக் கொண்டு தியானம் பண்ணுதலே அறிவின் தெளிவாகும், - -

(அ.சொ) திரு அழகிய மேனி உடம்பு நாமம்’ பெயர். திருவார்த்தை - உபதேச மொழிகள். ... "

(விளக்கம்) குருவின் திருவடிகளால் ஏற்படும் நன்மை இன்னது என்று அறிந்தபின், அவரது திருவுருவம். திருவார்த்தை, திருநாமம், உடல் இவற்ற்ையும் நல்மாணவர் கள் முறையே சிந்தனை செய்து கொண்டும்,கேட்டுக்கொண்டும் இருத்தல் வேண்டும் என்பது ஈண்டு விளக்கப்பட்டது. - - -