பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

#34

சீடர்கள் செய்ய வேண்டுவன

39. சக்திப்பது நந்தி தன்திருத் தாளினை

சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி

வந்திப்பது கந்தி நாமம்என் வாய்மையால்

புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.

(இ - ள்) ஞானசாரியனுடைய இரண்டு சிறந்த பாதங்களை இடையருது காண்டல் வேண்டும். அவரது அழகிய உருவத் திருமேனியை உள்ளத்தில் நினைந்த வண்ணம் இருக்கவேண்டும். உண்மையோடு அவர்தம் திருப்பெயரைப் போற்றி வழிபடுதல் வேண்டும். அவர் உபதேசித்த நல்ல ஞானனுபவ போதனைகளை உள்ளத்தில் பதிய வைத்தல் வேண்டும்.

(அ - சொ) தாள்.இணை - இரண்டாக இணைந்துள்ள பாதங்கள். வந்திப்பது - புகழ்ந்து போற்றி வழிபடுவது. வாய்மை - சத்தியம். புந்தி - உள்ளம். போதம் உபதேசம்: பொன்மொழிகள். பொன் - அழகிய.

(விளக்கம்) ஈண்டு நந்தி என்பவர் ஞானசாரியர் என்று கொள்வதுடன், சிவ பரஞ்சுடராகவும் கொள்ளலாம். அங்ங்ணம் கொள்ளும்போது, செய்ய திருமேனி என்பது பஞ்சாட்சர வடிவமான திருவுருவம் தாங்கிய நடராசப் பெருமானது வடிவம் என்பது பொருளாகும். திருநாமம் என்பது சிவாயநம என்னும் திருமந்திரமாகும். நந்திநாமம் நமச்சிவாயவே என்பது ஆன்ருேர் வாக்கு அன்ருே நடராசப் பெருமான் திருவடிவில் நமசிவய என்னும் ஐந்து எழுத்துக் களும் பொருந்தியுள்ளன என்பதைத் திருவடியில் நகரமும், வயிற்றில் மகரமும், தோளில் சிகரமும், முகத்தில் வகரமும், திருமுடியில் யகரமும் உள்ளன என்று அனுபவஞானிகள் கூறி யிருப்பது கொண்டு தெளியலாம். மேலும், இக்கருத்தை உறுதிப்படுத்த, நடராசப்பெருமான் கையில் உள்ள உடுக்கை சிகரத்தையும், வீசி நிற்கும் கை வா என்னும் எழுத்தையும், அருளும் கரம் யகரத்தையும், திருக்கையில் உள்ள மழு என்னும்