பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

#37

இன்பம் துய்க்கும்போது இறக்கவும் கூடும். 42. அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடி யாரொடு மந்தனம் கொண்டார் இடப்பக்க மேஇறை கொந்தது என்றர் கிடக்கப் படுத்தார் கிடங்தொழிந் தாரே. (இ) - ள்) மனைவிமார் பணியாரங்களைச் செய்து வைத் தார்கள். அங்ங்னம் அட்ட பலகாரங்களையும் கணவன் மார்கள் இன்புடன் உண்டனர். தமது இளைய பூங்கொடி போன்ற மனைவியருடன் இரகசியமாகச் சில பல வார்த்தை களையும் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் திடீ ரென்று தமக்கு இடப்பக்கம் சிறிது நோவுகிறது என்று கூறினர்கள். அதற்காகப் பா ய லி ல் படுத்தார்கள். அவ்வளவுதான் படுத்தபடியே இறந்தார்கள்.

(அ - சொ) அடப்பண்ணிவைத்தார் - விரும்பிய பலகாரங் களைச் செய்து வைத்தார். அடிசில் - சமைத்து வைக்கப்பட்ட பலகார உண்வு. மடக்கொடியார் . இளமை வாய்ந்த பூங்கொடி போன்ற மனைவிமார். மந்தணம் - இரகசியவார்த்தை கள். கொண்டார் - பேசினர். இறை . சிறிது. கிடந்து படுத்து. (விளக்கம்) இம்மந்திரம் இறப்பு எந்த நேரத்திலும் வந்து சேரும் என்பதை நன்கு விளக்குகிறது. மனைவியோடு இன்ப மாகப் பேசிக் கொண்டிருக்கும் போதும், இனிய உணவு வகைகளே உண்ணும்போதும் இறப்பு வரும் எனப்பட்டது.

நாட்டுத் தலைவர்களும் இறப்பர் 43, காட்டுக்கு காயகன் கம்மூர்த் தலைவன்

காட்டுச் சிவிகையொன் றேறிக் கடைமுறை நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட காட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே. - (இ - ள்) மக்கள், நாட்டுக்குத் தலைவன்தான் தம் ஊருக்கும் தலைவன்தான் என்ருர், ஆல்ை, கடைசியில்