பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

141

(இ - ள்) தேனிக்கள் பூவில் உள்ள தேனின் மனத்

தையும் சுவையையும் கண்டு, அவற்றைத் தேடி ஒன்று சேர்த்து, ஒரு கிளையில் வைத்துச் சேர்க்கும். அதனை உடல் வன்மை மிக்கவர் அத் தேனிக்களை ஒட்டி அவை சேர்த்த தேனைக் கொள்வார்கள். தேனீக்கள் தாம் சேகரித்த தேனேக் காட்டிக் கொடுத்துத் தாமும் மடிவது போன்றதே மக்கள் பாடுபட்டுத் தேடிய பணமும் என்க.

(அ- சொ) ஈட்டிய தேடிய இரதம் சுவை. கொம்புஇஃா.

(விளக்கம்) தேடிய செல்வத்தை நாம் எவ்வளவுதான் காத்தாலும், அது அழிந்து போகுமே அன்றி, நிலைத்து இராது என்பதை விளக்கவே, தேனிக்கள் சேர்த்த தேனை உவமை காட்டினர். உய்த்திட்டும் தேனீக்கரி என்ருர் பிறரும்.

பெற்ற செல்வத்தைப் புண்ணிய வழியில்

செலவு செய்க

48. வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறக்

தாரும் அளவே தெமக்கென்பர் ஒண்பொருள்

மேவும் அதனை விரிவுசெய் வார்கட்குக்

கூவும் துணைஒன்று கூடலும் ஆமே.

(இ - ள்) செல்வம் படைத்தவர் இறக்கும் தருவாயில், அவருடன் வாழ்வு நடத்திய மனைவியும், பிள்ளைகளும், கூடப் பிறந்தவர்களும், தனித்தனி 'எனக்கு எவ்வளவு பணத்தை ஒதுக்கி வைத்துள்ளீர்' என்றுதான் கேட் பார்கள். ஆகவே, உயிர் உள்ளபோதே அச் செல்வத்தைப் புண்ணிய வழியில் செலவு செய்பவர்கட்கு ஒப்பற்ற இறைவன் துணையாக வந்து கூடவும் கூடும்.

(அ - சொ) ஒண்பொருள் - சிறந்தபொருள். விரிவு செய்வார் - புண்ணிய வழியில் செலவு செய்பவர். ஒன்று . ஒப்பற்ற சிவன். -