பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

143

விரும்பியவர்களும் பின் வெறுப்பர் 50. விரும்புவர் முன்என்ன மெல்லியல் மாதர்

கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல் அரும்பொத்த மென்முலே ஆயிழை யார்க்குக் கரும்பொத்துக் காஞ்சிரங் காயும்ஒத் தேனே. (இ - ள்) நான் இளமையும் அழகும் கொண்டிருந்த போது என்னைக் கரும்பை வெட்டி, அதன் சாற்றைப் பருகு வது போல, மென்மைத் தன்மையுடைய மாதர்கள் விரும் பினர்கள். தாமரை மொக்குப் போன்று குவிந்த மென்மை யான முலையுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நகையினை அணிந்த மாதர்கட்குக் கரும்புபோலச் சுவையாக இருந்த நான், முதுமையுற்ற நிலையில், காஞ்சிரங்காய் போலக் கசப் புடையவனுயினேன். . -

(அ - சொ) இயல் - தன்மை. ஆய் - ஆராய்ந்தெடுத்த. தகர்த்து - வெட்டி இழை - நகை. இழையார் - ஆபரணம் அணிந்த பெண்கள். காஞ்சிரங்காய் - எட்டிக்காய்.

(விளக்கம்) முலையின் இளமைத் தோற்றம், தாமரை மலராத போதுள்ள தோற்றம்போல இருக்கும் ஆதலின், அரும்பு ஒத்த மென் முலே எனப்பட்டது. பெண்கள் தாமாகத் தேர்ந்தெடுத்த நகைகளை அணிபவர் ஆதலின் ஆய் இழையார்

எனப்படுவர்.

கிலேயாமை அறிந்து நின்மலனை ஏத்தவேண்டும் 51. தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்

இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும் பிழைப்பின்றி எம்பெரு மாண்டி ஏத்தார் அழைக்கின்ற போதறி யாரவர் தாமே. (இ - ள்) மக்கள் குளிர்ந்த மலர்க்கிளையில் தளிர்க் கின்ற செந்தளிர்கள் எல்லாம், காட்சிக்கு இன்பமாகத்