பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

14.6

(இ - ள்) உயிர்களைக் கொல்லுதல், பொருள்களைத் திருடுதல், மாதர் இன்பத்தினை அளவுக்கு மீறி அனுபவித் தல், பொய் பேசுதல், ஆகிய இவை மாரு மயக்கம் தருபவை. ஆகவே, இவற்றை நீக்கித் தலையான சிவபெரு மான் திருவடிகளே அடைந்து இன்பம் உற்றவர்கட்கு நரகத்துன்பம் இல்லை. இறைவனது திருவடிகள் ஞானனந் தத்தில் அழுந்தி இருக்கச் செய்யும், -

(அ - சொ) மலைவான - மயக்கமாக. இலே - நரகத்துன்பம் இல்லை. இவை - இறைவனது திருப்பாதங்கள்.

(விளக்கம்) கொலை, களவு, கள், காமம், பொய்கூறல் பஞ்சமகா பாதங்கள் எனப்படும். இறைவனே முழுமுதற் பரம் பொருள் ஆதலின் தலையாம் சிவம் எனப்பட்டனன்.

புலால் புசிப்போரை இயமன் தூதுவர்

துன்புறுத்துவர்

55. பொல்லாப் புலாலை நுகரும் புலையரை

எல்லாரும் காண இயமன்தன் தூதுவர் செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்

மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே. (இ - ள்) கொடிதாகிய மாமிசத்தை உண்ணும் கீழ் மக்களை இயமனுடைய தூதர்கள் எல்லோரும் காணும்படி இடிபோல முழங்கி, அவள்களைப் பிடித்துச் சென்று கொடிய இடமான நரகத்தில் மல்லாக்காகத் தள்ளி, எங்கும் அவர்கள் செல்லாதபடி தடுத்து நிறுத்தி வைப்பர்.

(அ - சொ) புலால் மாமிசம். நுகரும். உண்ணும். புலேயர் - கீழ் மக்கள். செல் - இடி மறித்து தடுத்து.

(விளக்கம்) பிற உயிரின் தசை உண்பதற்குத் தகுதி பற்றது. ஆதலின், அதனைப் பொல்லாப் புலால் என்றனர். உண்பவர் எக்குடியில் பிறந்த யாவரே யானுலும் அவர்கள் தாழ்ந்தவர்களே என்பார் புலையர் என்ருர்.