பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

夏奎领

(அ- சொ) ஆத்த - தாலி கட்டிய; அன்புடைய எனினும் ஆம். அகம் - வீடு. காத்த - கற்பொழுக்கத்தால் தன்னைக் காத்துக்கொண்ட காமுறும் விரும்பும். காளையர் - இளைஞர். இடர் - துன்பம். உற்றவாறு அடைந்ததுபோலாம்.

(விளக்கம்) காளை என்பது எருதுக்குரிய சொல். ஈண்டு இளைஞரைக் காளேயர் என்றது அவர்தம் தகாத ஒழுக்கம் கண்டு மாடுகள் என இழித்துச் காட்டற்கு ஆகும். ஈச்சம் பழம் மரத்தின் உயர இருக்கும். அம்மரமோ பல கருக்குக்களை கொண்டிருக்கும். அதனைப் பெறுதல் என்ருல், முள்போலத் தைக்கும் அம்மரத்தில் ஏறிப் பெறுதல் வேண்டும். அதைப் போலத்தான் பல காவல் உள்ள பிறமனையாளையும் அடையப் பல துன்பத்தை அனுபவிக்கவேண்டும் என்ருர். காத்த என்ப தற்குப் பிறரால் காக்கப்பட்டு வந்த என்னும் பொருளையும் கொள்ளலாம்.

விரும்பத்தக்க மனைவியிருக்க அருவருக்கத்தக்க பிறர் மனைவியை விரும்புபவர் துன்புறுவர் 58. திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை

அருத்தம்என் றெண்ணி அறையில் புதைத்துப் பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறி கருத்தறி யாதவர் காலற்ற வாறே. (இ - ள்) திருத்தம் உறச் செய்து வளர்த்த ஒப்பற்ற இனிய மாம்பழத்தை, இது நமக்குத் தின்பதற்குரிய பொருள் என்று எண்ணி வீட்டின் ஒர் இடத்தில் புதைத்து வைத்து விட்டு, உண்பதற்குச் சிறிதும் பொருத்தம் இல்லாத புளிக்கும் மாம்பழத்தைப் பெறுவதற்கு, அம் மரத்தின் கிளையில் ஏறி, அதனைப் பறிக்கையில் கீழே விழுந்து தமது காலே ஒடித்துக் கொள்பவர் சிறிதும் யோசனை அற்றவர் ஆவார்.

(அ - சொ) ஓர் ஒப்பற்ற தே - இனிய. மாங்கனி - மரம் பழம். அருத்தம் - பொருள். புளிமா - புளிக்கும் மாம்பழம். கொம்பு - கிளே. அற்ற ஒடித்துக்கொண்ட ஆறு - விதம்.