பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

ÍSG

ஆதலின், விலகுறு மனம் எனப்பட்டது. வெய்து என்ப தற்குக் கடிந்து என்று பொருள் கூறலாம். அதுபோது மாதர் மேல் செல்லும் மனத்தைக் கடிந்து தடுப்பீராக என்று பொருள்படும்.

பொருள் இலார்க்கு ஒன்றும் இல்லை

60. புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை அடையப்பட் டார்களும் அன்பிலர் ஆளுர் கொடையில்லே கோள் இல்லை கொண்டாட்டம் இல்லை கடையில்லை நாட்டில் இயங்குகின் ருர்கட்கே.

(இ - ள்) தரித்திர நிலை வந்ததும் நாட்டில் நடமாடு கிறவர்கட்கு மானத்தைக் காக்கும் புடவை கிழிந்தது போல வாழ்க்கையும் கெட்டுப் போகும். பொருள் உள்ள போது நெருங்கி நம்மை அடைந்திருந்தவர்களும் அன்பு இல்லாதவர் ஆவர். அவர்கட்குக் கொடுக்கும் வாய்ப்பு இல்லை; கொடுக்கல் வாங்கல் இல்லை; கொண்டாட்டங்கள் இல்லை; கம்பீரமான நடையும் கிடையாது.

(அ - சொ) கோள் - வாங்கல். கொடை - கொடுக்கும் குணம். நடை - தலை எடுத்து நடக்கும் நடை. இயங்குகின்ருர்நடமாடுபவர்.

(விளக்கம்) புடைவை மானத்தைக் காக்க உடுக்கப் படுவது. அதுபோலப் பணமும் மானத்தைக் காக்கவல்லது. ஆதலின் புடைவையை உவமை காட்டினர். பொருள் இருந்தால்தான் பலரும் வந்து சேர்வர்; அன்புகாட்டுவர் . பொருள் அற்ருல் அன்பு காட்டார். பொருள் இல்லாதவர் தருமம் செய்ய இயலாது. ஆதலின் கொடை இல்லை என்ருர் கொண்டாட்டம் என்பது பண்டிகை விழா முதலியன. பணம் இருந்தால் நிமிர்ந்து நேரே நடக்க இயலும். அஃது இன்றேல் தலைகுனிந்துதான் நடக்கவேண்டும். ஆகவே நடையில்லை எனப்பட்டது. -