பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

置额雳

அடைக்க இறைவனது திருவடி ஞானத்தை அடைய வேண்டும். அதனை அடைந்தால் மலமாயையாகிய குழியும் அடைபடும்; பொருமை நீங்கிய நிலையும் உண்டாகும். • ‘

(அ - சொ) கல்குழி - (ஈண்டு) வயிறு. கனகம் - பொன். அரியது - கடினமானது. அக்குழி - மல மாயையாகிய குழி. துார்க்கை - அடைத்தல். அறிவு - திருவடி ஞானம். அழுக்கு - பொருமை. -

(விளக்கம்) வயிறும் ஒரு பள்ளமான இடம். ஆதலின் அஃது ஈண்டுக் குழி எனப்பட்டது. அதன் வன்மை கருதி அதனைக் கற்குழி என்றனர். சாதாரணக் குழியை அடைத்து விடலாம். ஆனல் வயிற்றுக் குழியினை அடைக்கவே முடியாது. ஒருவேளை உணவு கொடுத்து வயிற்றுக் குழியை நிரப்பியதும், மறு வேளே அவ்வயிறு குழியுடன்தான் காணப்படுகிறது. ஆகவே, வயிற்றுக் குழியைத் அடைக்க முயல்வதைவிட, மலமாயையாகிய குழியை அடைக்க முயலவேண்டும் என்று இதில் வற்புறுத்தப்படுகிறது. அக் குழியை அடைக்கப் பொருள்வேண்டா: அறிவே போதும் என்கிருர்,

ஓமத் தலைவன் சிவனே ஆவன் 63. ஒண்சுடரான உலப்பிலி நாதன

ஒண்சுடர் ஆகிஎன் உள்ளத் திருக்கின்ற கண்சுட ரோன் உல கேழும் கடந்த அத் தண்சுடர் ஓமத் தலைவனும் ஆமே. (இ - ள்) ஒளி பொருந்திய சுடராகி இருப்பவனும் , அழிவில்லாத தலைவனும், ஒளி பொருந்திய சுடராக என் மனத்தில் எழுந்தருளி இருக்கின்ற கண் ஒளி போன்ற வனும், ஏழ் உலகங்களும் கடந்த குளிர்ந்த சுடர்வடிவினன் ஆகஇருப்பவனும் ஆகிய அவனே யாகத்தலைவன் என்க.

(அ - சொ) ஒண்சுடர் - ஒளிபொருந்திய சுடர். உலப்பு அழிவு. இலி - இல்லாதவன். ஓமம்-யாகம்.