பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

క్షీశ్రీ

(விளக்கம்) சூரிய சந்திரர்கள் சுடராக மிளிர்ந்தாலும் இறைவனிடம் ஒளி பெற்றே அவர்கள் ஒளிவடிவினைத் தாங்கி உள்ளார்கள். ஆகவே, இறைவனே பெருஞ்சுடர் ஆதலின் ஒண் சுடர் எனப்பட்டனன். எல்லாத் தேவரும் இறப்பர். சிவனே இறவாதவன். ஆதலின் உலப்பிலி எனப்பட்டான். நாதன்-தலைவன். ஒலி வடிவாயும் இருப்பவன் ஆகலின் அவனை நாதன் என்றலும் தகும். பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் கனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம், ஆகிய ஏழ் உலகங்களையும் இறைவன் கடந்தவன் ஆதலின் உலகேழும் கடந்த எனப்பட்டனன். இறைவன் பேர் ஒளிப்பிழம் பாயினும், கடந்தவனுயினும், அன்பர்கள் காணுதற்கு எளியளும் தன்மையன் என்ற பொருளை உணர்த்த , தண் சுடர் எனப்பட்டான். யாகக் கர்த்தா எனச் சில தெய்வங்களைக் குறிப்பிடல் பொருத்தமற்றது என்பதை விளக்கவே, ஓமத் தலைவன் இறைவனே என்பது இங்கு விளக்கப்பட்டது. இந்த உண்மையினை உணராமையினுல்தான் தாருகா வனத்து இருடி கள் இடருற்றனர்; தட்சனும் துன்புற்றனன். அந்தணர் யார் எனல் 64. அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர் செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமம்செய்து அந்தவம் கல்கரு மத்துகின் ருங்கிட்டுச் சந்தியும் ஒதிச் சடங்கறுப் போர்களே. (இ - ள்) அந்தணர் என்று கூறப்படுபவர், ஆழி தொழில்களை மேற்கொண்டவர் ஆவார். ஒமாதி காரியங் களைத் தட்டாது செய்து, மூன்று காலமும் செய்யவேண்டிய செயல்களைப்புரிந்து, நல்ல தவம் நல்லசெயல்களைச் செய்து, சந்தியாகாலங்களில் வேதமந்திரங்களைக் கூறிச் சடங்குகளை வரையறுத்துச் செய்பவர் ஆவார். -

(அ - சொ) அந்தணர் - அறவோர், அறு தொழில் - ஆறு தொழில்கள். செந்தழல் - யாகாதி காரியம். ஓம்பி - பாதுகாவ லுடன் நடத்தி. நியமம் - செய்யவேண்டிய செயல்கள், அம் .