பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

iá

அக்நெறி இந்நெறி என்னது அட்டாங்கத்து அக்திெ செகன்று சமாதியிலே நின்மின் கன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம் புன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே. சிறந்த ஞான நூலான திருமந்திரத்தை நாள்தோறும் ஓதி நன்மை பெறவேண்டும் என்னும் சிறந்த நோக்கத்தோடு, பேராசிரியர் வித்துவான் பாலூர் கண்ணப்பு முதலியார் அவர்கள் இத்தகைய நூலுக்கு உரை டெழுதியுள்ளார்கள் சிறந்த தமிழ்ப் புலமையோடு ஆன்மிக நெறியில் அயராது தொண்டு செய்யும் ஆர்வமும் வாய்ந்த அவர்கள் பல வருஷங் களாகத் தாம் ஆய்ந்தறிந்த உண்மைகளைத் திரட்டிக் கட்டுரைகளாக முன்னர்ச் சேர்த்துள்ளார்கள். மூவாயிரம் பாசுரங்களைப் படிப்பதற்குத் துண்டுதலாகவும், நாளுக்கொரு பாசுரமாக எளிதில் படிப்பதற்கு ஏற்றதாகவும், 365 பாசு ரங்களைத் தேர்ந்தெடுத்து விளக்கக் குறிப்புகளுடன் அமைத் துள்ளார்கள். ஆன்மிக நெறியில் பயிலுவோர்க்கு இந்நூல் உரை பேருதவியாயிருக்கும் என்று கருதுகிறேன். இந்நூலா சிரியர் தொடர்ந்து இன்னும் பல சிறந்த நூல்களுக்கு உரை எழுதுவதற்கு இறைவன் திருவருள் துணை நிற்குமாக!