பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161

16i

அரசனுல் காக்கப்பட வேண்டியவர்கள்

74. ஆவையும் பாவையும் மற்றற வோரையும்

தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்

காவலன் காப்பவன் காவா தொழிவனேல்

மேவும் மறுமைக்கும் மீளா நரகமே.

(இ - ள்) பசுக்களையும், மாதர்களையும், இல்லற நெறி யில் உள்ளவர்களையும், தேவர்கள் வணங்கும் அழகிய தவ வேடத்தாரையும் அரசன் காக்கவேண்டியவன் ஆவன். அரசன் இவர்களைக் காக்காமல் இருந்தால், இப்பிறப்பிலே மட்டும் இன்றி மறுபிறப்பிலும் நரகத்துன்பத்தில் அழுந்தி இருப்பவன் ஆவான்.

(அ- சொ) ஆ - பசு. பாவை-பதுமை போன்ற பெண்கள். அறவோர் - குடும்பத்தார்கள். திரு - அழகிய வேடத்தார் - தவவேடம்பூண்டவர்கள். காவலன் - அரசன். மறுமை - மறு பிறப்பு. மேவும் அடைவான்.

(விளக்கம்) அறம் என்பது இல்வாழ்க்கை. இது வள்ளுவர் போன்ருர் கருத்து. ஆதலின் அறவோர் என்பர் ஈண்டு இல்லறத்தார் எனப்பட்டனர். திருவேடம் உண்மை வேடம். ஆதலின், அதனைத் தேவரும் போற்றுவர். மறுமைக்கும் என்றதனுன் இம்மையிலும் நரகத் துன்பம் ஏற்படும்.

அரசன் பெற வேண்டியது ஆறில் ஒன்று 75. திறம்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்

மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும் சிறந்த நீர் ஞாலம் செய்தொழில் யாவையும் அறைந்திடில் வேந்தனுக் காறில்ஒன் ருமே. (இ - ள்) அரசன் பதமுத்தி எனப்படும் இரண்டு வகையான முத்திகளையும் அருட்செல்வத்தையும் பொருட்

த.-11