பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

164

மழையே வளர்ச்சிக்குக் காரணம்

78. அமுதுாறும் மாமழை நீரத ளுலே

அமுதுறும் பல்மரம் பார்மிசை தோற்றும் கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை அமுதுறும் காஞ்சிரை ஆங்கது. வாமே. (இ- ள்) தேவாமிருதத்தின் தன்மை தன்னிடத்தே கொண்டு ஊறும் சிறந்த மழை நீரினல், அமிர்தம் போன்ற இனிய பழங்களேத்தரும் பலவிதமான மரங்களும், பூமியில் தோன்றி வளரும், பாக்குமரமும், .ெ த ன் னே மரமும், கரும்பும், வாழையும் செழிக்கும். எட்டிக்கனியும்கூட வளரும்.

(அ - சொ) அமுது - தேவாமிருதம். மா - சிறந்த. பார்மிசை - பூமியில். கமுகு - பாக்குமரம். தெங்கு - தென்னை மரம். காஞ்சிரை - காஞ்சிரங்காய்; எட்டி.

(விளக்கம்) உலகம் நிலைநிற்க மழை இன்றியமையாதது. ஆதலின், அஃது அமுதம் எனப்பட்டது. நீரால் காஞ்சிரங் காய் நச்சுத் தன்மையில் குறைதலின் அமுதுநூறும் என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டது. அல்லது கமுகூறும் என்னும் தொடர்க்கு அடைமொழி ஆக்கினும் அமையும்.

அறம் செய்தல் வேண்டும் 79. ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன் மின்

பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின் வேட்கை யுடையீர்! விரைந்தொல்லை உண்ணன்மின் கனக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே. (இ) - ள்) எல்லோருக்கும் கொடுங்கள். அவர்இவர் என்ற வேற்றுமை கருதாதீர்கள். நம்மை நோக்கிவரும் விருந்தி னரைப் பார்த்துப் பின் உண்ணுங்கள். இது பழைய பொருள் என்ற எண்ணத்தால் அதனைப் பாதுகாத்து வையாதிர்கள். ஆசையுடைய மக்களே! பசிகாரணமாக விரைவாக