பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167

స్త్రీ

(இ) - ள்) இயமன் மிக்க பலசாலி. ஆகவே, வன்மை யுடன் உயிர்களைப் பற்ற வருவான். அவன் ஒருவனது குணங்களைப் பற்றிக் கவலைப்படமாட்டான். நல்லவன யிற்றே என்றும் எண்ணுன், ஏழையாயிற்றே என்றும் சிந்தியான். இளைஞன் ஆயிற்றே என்றும் யோசியான். ஆகவே, அவன் வருமுன் ஒழுக்கம் முதலான தன்மையுடன் நல்ல தவத்தைச் செய்யுங்கள்.

(அ - சொ) இன்மை . பொருள் இல்லாமை (தரித்திரம்). ஒராது - ஆரயாமல். கூற்றம் - இயமன். தன்மை - ஒழுக்கமாம் தன்மை.

(விளக்கம்) இயமன் எந்த உயிரைக் கொண்டுசெல்ல வேண்டும் என்று எண்ணிேைன அதனைக் கொண்டேபோவன். அவ்வுயிரினது இளமை, வறுமை, நற்பண்பு ஆகிய இவற் றைச் சிறிதும் கருதான். இவன் வன்மைமுன் எவர்வன்மை யும் செல்லாது என்பதை உணர்த்தவிே வன்மையில் வந்திடும் கூற்றம் எனப்பட்டது.

அறம் செய்யாதவர் செல்வம் பயனற்றதாகும் 83. எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன

ஒட்டிய கல்அறம் செய்யா தவர்செல்வம் வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும் பட்டிப் பதகர் பயன்அறி யாரே. (இ - ள்) விரும்பிய நல்ல தானதருமங்களைச் செய்யாத வர் செல்வமானது, எட்டிமரமானது பழுத்துப் பெரிய பழங்களைக் கீழே வீழ்த்தி இருப்பது போன்றது. வட்டி பெற்றுத் தேடிப் பூமியில் சேர்த்திடும் அஞ்சாத பாதகர்கள் செல்வத்தின் பயனை அறியாதவர் ஆவார்.

(அ - சொ) ஒட்டிய - விரும்பிய. இருங்கனி - பெரிய பழம். ஈட்டியே - தேடியே, மண் - பூமி. முகந்திடும் - சேர்க்கும்.

(விளக்கம்) எட்டிப் பழுத்துக் கீழே விழுந்திருந்தாலும், அதனை யாரும் புசியார். அதுபோலச் செல்வத்தைப் பெற்று அறம்செய்யாதவனை எவரும் அடையார், வட்டி பெற்றுப்