பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

#6

பொய்யான மொழிகளைக் கேட்டுப்பாவத்தையே உணர்ந்த வர் ஆவார். இத்தகையவர்கள் பகையுள் நிலைத்து நிற்பர்.

(அ - சொ) அண்ணல் - சிவபெருமான். திறம் - வகை. புறம் - வெளியிடம். மறம் - பாவம். மன்னி - நிலைத்து.

(விளக்கம்) அறம், இறைவனை அடைய வழிகோலும் அதனைப் புரியாவிடின், இறைவனைக் காண இயலாது. இவர்கள் புண்ணிய வசத்தால் புகக்கூடிய சிவலோகத்தின் அருகும் செல்ல இயலாது என்பார் புறம் அறியார் என்றனர். உயிர் அடையக்கூடிய பதவி நான்கு. அவை சாலோகம்: சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்பன. சாமீபப் பதவி கிட்டாதபோது ஏனைய பதவிகளும் இல்லை என்பதைக் குறிப் பாகக் காட்டியவாரும்.

தருமம் செய்யாரை நோய் அணுகும் 86. இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்

தருமம்செய்யாதவர் தம்பால தாகும் உருமிடி காகம் உரோகணி கழலே தருமம் செய் வார்பக்கல் தாழகி லாவே. (இ - ள்) இருமலும், இரத்தமில்லாச் சோகை நோயும், கோழையும், கணேச்சூடும் தருமம் செய்யாதவரை அடை யும். தருமம் செய்பவர் அருகேகூட அச்சம் தரும் இடியும், பாம்பும், உரோகிணி முதலாம் நட்சத்திரங்களால் வரும் கெடுதியும், ராஜபிளவை போன்ற கட்டிகளும் அணுக மாட்டா.

(அ - சொ) சோகை - இரத்தம் இன்மை. ஈளே - கோழை. வெப்பு - உஷ்ணக்காய்ச்சல். உரும் - அச்சம்தரும். கழலை - கட்டி.

(விளக்கம்) எத்தனையோ வகை நோய்கள் இருந்தாலும், ஈண்டுக் கொடுமைக்குக் காரணமான நோய்களே எடுத்துச் சொல்லப்பட்டன. இருமல் கூடியரோகமாகும். ஈளை காச மாகும். ஜாதகத்தின் அமைப்பில் சில நட்சத்திரங்கள்