பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173

173

(இ - ள்) தியானத்துடன் கலந்துநின்ற ஞானிகளுடன் விளங்கும் அந்த ஜோதி வடிவினன் ஆன இறைவனைச் சித்தர்கள் என்றும் தெரிந்து அறிந்தவர்களாக இல்லை. அத்தகைய அறிதற்கரிய சிவன் பக்தியால் தன்னைப் டிணிபவர்முன் நின்று மோட்சத்தையும் தந்தருளுவன்.

(அ - சொ) உற்று - தியானத்தில் பொருந்தி. பத்திமை - பக்தி. முத்தி - மோட்சம்.

(விளக்கம்) சித்தர்கள் சித்துக்களை யாடுதலில் கருத் துடையவர்கள். அதனுல் பயன் க ரு து ப வ ர். ஆதலின் அவர்கட்கு இறைவன் எளிதில் அருள் புரிதல் இலன். பக்தர் கள் பயன் கருதாதவர்கள். தம்மையே அரனுக்கு அர்ப்பணம் செய்பவர். ஆதலின், அவர்கள் கண்முன் காட்சி அளித்து மோட்சம் அருளுகின்ருன்.

அன்பினுல் அரனைக் காணலாம் எனல் 92. கண்டேன் கமழ்தரு கொன்றை யிஞன் அடி

கண்டேன் கரியுரி யான்தன் கழல்இணை கண்டேன் கமல மலர்உறை வான்அடி கண்டேன் கழலதென் அன்பினுள் யானே. (இ) - ள்) மணம் வீசும் கொன்றை மலர் அணிந்த இறைவன் திருவடிகளைக் கண்டனன். யானைத் தோலைப் போர்த்துள்ள இறைவனது இரண்டு திருவடிகளைக்கண் டனன். மனமாகிய தாமரை மலரில் வாழ்பவனது திருவடி களேக் கண்டனன். இத்துணைக்கும் காரணம் அன்புதான். ஆகவே என் உள்ளத்தில் அன்பினல் இறைவனது திருவடி களைக் கண்டனன்.

(அ - சொ) கமழ்தரு - மணம்வீசும். கரி - யானை. உரி . தோல், கழல் - வீரத்தண்டை அணிந்த பாதங்கள். இணை . இரண்டு. கமலம் - மனமாகிய தாமரை. உை றவான் - தங்கி இருப்பவன்.

(விளக்கம்) கொன்றைமலர் இறைவனது அடையாளப்பூ,