பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

277

களைப் போன்ற கல்லாதவர்களே நல்லவர் ஆவர். ஏனெனில் கல்லாத மூடர்கள் உண்மைக் கருத்தை அறியாதவர் ஆவார்.

(அ சொ) கடன் - கடமை. அன்று - ஆகாது.

(விளக்கம்) காக்கை வேப்பம் பழத்தை வி ரு ம்பு வ து போலப் படிக்காதவர்கள் படிக்காதவரையே விரும்பி அவர் களையே நல்லவராகக் கருதுவர் என்று கூறிப் படியாதாரின் அறிவில்லாமையினை இழித்துக் கூறியவாருயிற்று.

நியாயமுடையவர் பெறும் பேறு

98. நடுவுகின் ருர்க்கன்றி ஞானமும் இல்லை கடுவுகின் ருர்க்கு கரகமும் இல்லை கடுவுகின் ருர்கல்ல தேவரும் ஆவர் கடுவுகின் ருர்வழி நானும்நின் றேனே.

(இ - ள்) நியாயம் தவருத நடுவு நிலைமையுடைய வர்க்குத் தான் ஞானம் வருமே அன்றி, நடு நிலைமை தவறியவர்கட்கு ஞானம் பிறவாது. நடுநிலைமையுடையவர் கட்கு நரகத்துன்பம் கிடையாது. நடுநிலையுடையவர்கள் தேவர்கள் ஆவார். நடுவு நின்ருர் வழியில் நானும் நின்றேன்.

(அ - சொ) நடுவு - தராசு முள் நேரே நடுவே நிற்பது போன்ற நியாயமான தன்மை. அன்றி - அல்லாமல்.

(விளக்கம்) திருமூலர் சிறந்த ஞானி. அவர் சிறந்த சித்தர், யோகி. அப்படி இருந்தும் நடுநிலையுடையவர்களைத் தம் இனத்தவராகக் கொண்டனர். அதனுல்தான் நடுநிலை யுடையார் வழியில் நானும் நின்றேன் என்றனர். இதனல் நியாயம் தவருது நடந்தால் ஞானிகளின் உறவு ஏற்படும் என்பது பெறப்படுகிறது.

த.-12