பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

16

உரை எழுதி விளக்கம் செய்துள்ளது போல மருத்துவப் பகுதிக்கும் நல்ல பொருள் விளக்கம் எழுதியுள்ளனர். அதனை எழுதுவதற்குச் சித்த நூற்களையும் ஆராய்ந்து பொருள் கூறியுள்ளனர். தமிழ்த்துறையல்லாத ஆற்றத்துறையினையும் ஆய்ந்து, அதைத் தக்காங்கு எழுதி அமைத்திருப்பது போற்றற்கும் பாராட்டுதற்கும் உரியதாகும்.

மருத்துவத்துறையில் திருமூலர் 18 சித்தர்களில் ஒருவராக வைத்தெண்ணப்படுகிரு.ர். இவர் செய்த திருமந்திரத்தில் மருத்துவப்பகுதியும், கருத்தோற்றம், கருவளர்ச்சி அமைப்புப் பற்றியும், மூன்று நாடிகளாகிய வாத, பித்த, சிலேத்து மங்களேப் பற்றியும் மூச்சுப்பழக்கம், அதாவது இடகலை, பிங்கலை, சுழுமுனை இவைகளில் மூச்சு எவ்வாறு மாறிமாறிப் பாய்கிறது என்பதையும், மூச்சின் அளவைக்கொண்டு கருத் தோற்றத்தினுல் வாழ்நாள் விவரம் அறிய முடியமென்பதை யும், அப்பயிற்சியைப் பற்றி எவ்வளவு ஒருவன் அறிய வேண்டுமோ அவ்வளவும் கூறப்பட்டிருக்கின்றன. இவருடைய சமாதி சிதம்பரத்தில் உள்ளதென்று கூறுவாருமுளர்.

திரு. பாலூர் கண்ணப்ப முதலியார் சரித்திர வாயிலாகவும், கல்வெட்டு வாயிலாகவும், மற்றும் பல சான்று களாலும் திருமூலரைப்பற்றிப் பல்வகையாலும் ஆராய்ந்து, அவருடைய காலவரையறை, நூல் செய்த காரணம், வாழ்க்கை வரலாறு, இன்ஞேரன்ன பிறவற்றை நன்ருக ஆராய்ந்து, இந்நூலின் முதலில் தனித்தனிக் கட்டுரையாக 15 கட்டுரைகள் வரைந்துள்ளனர். இக்கட்டுரைகளால் அநேக நுட்பமான கருத்துக்கள் நமக்கு நன்கு தெரியவரு கின்றன. -

இந்நூலைச் சைவசமயத்தவர்களேயன்றித் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் படித்தறிந்தால், சமய அறிவு வளர்வதுடன் தமிழ் மந்திரத்தை ஒதியும் உணரலாம். மேலும், இந்த உரை விளக்கம் யாவர்க்கும் எளிதில் மந்திரத்தின் பொருளை நன்கு தெரித்து கொள்வதற்குப் பேருதவியாய் இருக்குமென்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.