பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179

1 ýg

இறைவனுடன் ஒன்றைச் செய்யாத தடைகளையும் உணரார். வள்ளலாகிய சிவனது அருளால் வாழவும் மாட்டார். தெளிந்த உண்மையாகிய ஞானத்தைத் தெளிவிக்கும் சிவபோகத்தையும் சேரமாட்டார். இந்தக் குணங்களுக்குக் காரணமானவர்கள் கள்ளைக் குடிக்கும் மக்களே ஆவார். இவர்கள் உண்மைக் கருத்தையும் உணர மாட்டார்கள்.

(அ - சொர் ஓரார் - ஆராயார். பசு - ஆன்மா. ஈண்டுத் தன்னை உணர்த்துகிறது. பாசம் - தடைகள் (ஆணவம் கன்மம் மாயை).

(விளக்கம்) கட்குடிமயக்கால் உண்மை உணர இயலாது என்பது விளக்கப்பட்டது. இறைவன் அருளும் இவர்கட்கு இல்லை எனப்பட்டது. தெள்ளுண்மை ஞானமாவது திருவடி

@5ITóõTup.

கள்ளுண்பவர் சிவானந்தம் அனுபவியார்

101. மயங்கும் தியங்கும் கள்வாய்மை அழிக்கும் இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி முயங்கும் ஈயம்கொண்ட ஞானத்து முக்தார் இயங்கும் இடையரு ஆனந்தம் எய்துமோ. (இ - ள்) கள்ளானது தன்னை உட்கொண்டவனே மயங்கச் செய்யும்; கவலும்படி செய்யும், உண்மையை அழிக்கும். நடமாடும் பெண்களுடைய இன்பமேஅடைந்து அவர்களைத் த ழு வி யே இருக்கவைக்கும். இத்தகைய இயல்புடையவர்கள் நல்ல ஞானத்தில் முந்தி நிற்கார். ஆகவே, கள் இடையருது நடமாடும் சிவானந்தத்தில் கொண்டு சேர்க்குமோ? சேர்க்காது.

(அ - சொ) தியங்கும் - கலக்கமுறச்செய்யும். வாய்மை - சத்தியம். இயங்கும் நடமாடும். எய்தி - அடைந்து.